For Daily Alerts
Just In
நியூசிலாந்தில் அதிக சக்திவாய்ந்த நிலநடுக்கம்- சுனாமி எச்சரிக்கை இல்லை
வெலிங்கடன்: நியூசிலாந்தில் மிக அதிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் இன்று ஏற்பட்டது. இது ரிக்டரில் 7.4 அலகுகளாகப் பதிவானது.
நியூசிலாந்தின் வடகிழக்கு கடற்கரை பகுதிகளில் அந்நாட்டு உள்ளூர் நேரப்படி அதிகாலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின.

கெர்மடெக் தீவுகளை மையமாக வைத்து இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சுனாமி எச்சரிக்கைக்கான வாய்ப்பு குறித்து ஆராயப்பட்டது,

ஆனால் முதல் கட்டமாக நியூசிலாந்தின் தேசிய அவசரநிலை நிர்வாகம், நியூசிலாந்துக்கு சுனாமி எச்சரிக்கை ஆபத்து இல்லை என தெரிவித்துள்ளது.
சீனாவை ஒருபோதும் நம்பக்கூடாது.. மோதலை நினைவு கூர்ந்த 1962ல் போரில் பங்கேற்ற வீரர்கள்
கூடுதல் விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.