For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தோனேசியாவை உலுக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - 67 பேர் பலி, நூற்றுக்கணக்கானோர் படுகாயம்

Google Oneindia Tamil News

ஜகர்தா: இந்தோனேசியாவில் உள்ள சுலவெசி தீவில் இன்று காலையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளதாக அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பூகம்பம் உள்ளிட்ட பேரழிவுப் பிரதேசங்களில் இந்தோனேசியா முதன்மையான இடமாகும். பசிபிக் நெருப்பு வளையம் என்று அழைக்கப்படும் பகுதியில் இந்தோனேசியா உள்ளது.

இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.2 அலகாக பதிவாகியிருந்த இந்த நிலநடுக்கம் காரணமாக, அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் கடுமையாக குலுங்கின. பொதுமக்கள் அவசரம் அவசரமாக வீடுகளை விட்டு வெளியேறினர். ஒரு மருத்துவமனை கட்டிடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது. இடிபாடுகளில் சிக்கி 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

 Powerful earthquake in Indonesias 67 kills, hundreds injures

இதுபற்றி தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று கட்டிட இடிபாடுகளை அகற்றி மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். பலரது உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், மேலும் சிலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்பு பணி தொடர்ந்து நடைபெறுகிறது. இதுவரை 67 பேர் உயிரிழந்திருப்பதாகவும் நூற்றக்கணக்கானோர் படுகாயமடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பூகம்பம் உள்ளிட்ட பேரழிவுப் பிரதேசங்களில் இந்தோனேசியா முதன்மையான இடமாகும். பசிபிக் நெருப்பு வளையம் என்று அழைக்கப்படும் பகுதியில் இந்தோனேசியா உள்ளது. இப்பகுதியில் பூமியைத் தாங்கும் பெரும்பாறைகள் ஒன்றையொன்று உரசிக்கொள்ளும், மோதிக்கொள்ளும். இங்கு எரிமலை சீற்றங்கள் அதிகம்.

டெல்லியில் விவசாயிகளுடன் நடந்த 9வது சுற்று பேச்சுவார்த்தை நிறைவு.. முட்டுக்கட்டை தொடர்கிறதுடெல்லியில் விவசாயிகளுடன் நடந்த 9வது சுற்று பேச்சுவார்த்தை நிறைவு.. முட்டுக்கட்டை தொடர்கிறது

கடந்த 2004ஆம் ஆண்டு இந்தோனேசியாவில் சுமத்ரா தீவுகளில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் மிகப் பெரிய சுனாமி பேரழிவு ஏற்பட்டது. ரிக்டரில் 9.1 அலகுகள் பதிவான இந்த நிலநடுக்கத்தால் இந்தியா உட்பட இந்த பிராந்தியத்தில் மொத்தம் 2,20,000 பேர் பலியாகினர். இந்தோனேசியாவில் மட்டும் 1,70,000 பேர் உயிரிழந்தனர்.

இதே போல கடந்த 2018ஆம் ஆண்டில் சுலவேசி தீவுகளில் மற்றொரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 7.5 ஆக பதிவானது. அப்போது சுனாமி பேரலைகள் எழுந்து மொத்தம் 4,300 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தோனேசியா நாட்டிற்கு இது போராத காலம்தான் என்று சொல்ல வேண்டும். கடந்த வாரம் ஜகர்தாவில் இருந்து கிளம்பிய விமானம் விபத்தில் சிக்கியதில் அத்தனை பேரும் ஜலசமாதியாகினர். இந்த நிலையில் இன்றை தினம் ஏற்பட்ட நிலநடுக்கம் நூற்றுக்கணக்கானோரை பலி கொண்டுள்ளது.

English summary
6.2 magnitude earthquake hit Indonesia's Sulawesi island early Friday.At least 67 people have died hundreds injures.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X