For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்தோனேசியாவின் ஹல்மஹேரா பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை இல்லை

Google Oneindia Tamil News

ஹல்மஹேரா: இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். இந்தோனேசியாவின் ஹல்மஹேரா தீவு பகுதியில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் அளவு ரிக்டரில் 7.3 ஆக பதிவாகியுள்ளது. இதுபற்றி தகவல் தெரிவித்துள்ள அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனம் இந்தோனேசியாவில் உள்ளூர் நேரப்படி காலை 09:10 மணிக்கு ஹல்மஹேராவில் 7.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவானதாக கூறியுள்ளது.

Powerful earthquake in Indonesias Halmahera .. No tsunami warning

இந்தோனேசிய பகுதியில் மிகவும் ஆபத்தான மற்றும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் சுனாமி எச்சரிக்கை ஏதும் இதுவரை விடுக்கப்படவில்லை

இது பற்றி மேலும் தகவல் தெரிவித்துள்ள அமெரிக்க புவியியல் மையம் ஹல்மஹேராவை தாக்கியுள்ள பூகம்பம் சக்திவாய்ந்தது ஆனால் ஆழமற்றது, இந்த நிலநடுக்கம் 7.3 ரிக்டர் அளவு மற்றும் 10 கிலோ மீட்டர் ஆழம் கொண்டதாக உள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் உயிரிழப்புகளோ அல்லது பெரிய சேதமோ ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை

தூக்க கலக்கத்தில் உமாதேவி.. சென்னை- பெங்களூரு ரயிலில் கழிவறைக்கு சென்றபோது நேர்ந்த சோகம் தூக்க கலக்கத்தில் உமாதேவி.. சென்னை- பெங்களூரு ரயிலில் கழிவறைக்கு சென்றபோது நேர்ந்த சோகம்

முன்னதாக இன்று காலை ஆஸ்திரேலிய நாட்டிலுள்ள ப்ரூம் நகரின் மேற்கு கடற்பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.4 ஆக நிலநடுக்கத்தின் திறன் பதிவானது குறிப்பிடத்தக்கது.

English summary
People are horrified by the powerful earthquake in Indonesia. The earthquake shook parts of Indonesia's Halmahera Island.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X