For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

துருக்கி, சிரியாவில் கடும் நிலநடுக்கம்..உறக்கத்தில் பறிபோன 1300 உயிர்கள்.. தோண்ட தோண்ட வரும் சடலங்கள்

துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 1300 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தோண்ட தோண்ட சடலங்கள் கிடைப்பதால் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் அச்சமடைந்துள்ளனர்.

Google Oneindia Tamil News

அங்காரா: துருக்கி,சிரியாவில் ஏற்பட்டுள்ள சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 1300 மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்துள்ளன. கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமடைந்துள்ளது. தோண்ட தோண்ட சடலங்களாக கிடைப்பதால் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது. துருக்கி அரசு அவசர நிலை பிரகடனம் செய்துள்ளது. துருக்கிக்கு தேவையான உதவிகளை செய்ய தயாராக இருப்பதாக இந்திய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

துருக்கி நாட்டின் நர்டஹி நகரில் இருந்து 23 கிலோமீட்டர் கிழக்கே 17 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கியின் நேரப்படி அதிகாலை 3.20 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவாகியுள்ளது. துருக்கி - சிரியா எல்லை அருகே உள்ள பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. லெபனான், ஜோர்டான், பிரிட்டன், ஈராக் உள்ளிட்ட நாடுகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Powerful Earthquake of 7.9-Magnitude Strikes Southern Turkey

துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்ட வீடியோ சமூக வலைதரங்களில் பரவி வருகிறது. இந்த வீடியோவில் இடிந்த கட்டிடங்கள், தெருக்களில் தஞ்சம் புகுந்த மக்கள் பெரும் வேதனை ஏற்படுத்த கூடிய காட்சிகள் உள்ளன. அதிக அளவிலான கட்டிடங்கள் இடிந்துள்ளதால், பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

இருநாடுகளிலும் பல கட்டிடங்கள் தரைமட்டாகியுள்ளன. தோண்ட தோண்ட சடலங்கள் கிடைப்பதால் பலி எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இடிபாடுகளுக்கு இடையே சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

Powerful Earthquake of 7.9-Magnitude Strikes Southern Turkey

நிலநடுக்கம் ஏற்பட்டத்தில் இருந்து சரியாக 15 நிமிடங்கள் இடைவெளியில் இன்னொரு சக்திவாய்ந்த நிலநடுக்கமும் ஏற்பட்டுள்ளது. அது 6.7 ரிக்டர் என்றளவில் இருந்தது. அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் பலரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்துள்ளார். இதனால் துக்கத்தில் இருந்த பலரும் உயிரிழந்திருக்கக்கூடும் என கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த 530க்கும் மேற்பட்டவர்களின் உடல்கள் தற்போதுவரை மீட்கப்பட்டுள்ளது.

அதிகாலை நேரத்தில் மக்கள் அச்சத்துடன் வீடுகளை விட்டு வெளியே ஓடிவரும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வஐகின்றன. காசியான்டேப் நகரம் சிரிய எல்லையை ஒட்டியுள்ள நகரமாகும். தொழில் நகரமாக இது அறியப்படுகிறது. இந்த நகரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் அருகிலிருக்கும் லெபனான், சைப்ரஸ், சிரியா நாடுகளிலும் உணரப்பட்டுள்ளது. இதில் சிரியாவில் மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இருநாடுகளிலும் இதுவரை 1300 பேர் உயிரிழந்ததாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. துருக்கிக்கு தேவையான உதவிகளை செய்ய தயாராக இருப்பதாக இந்திய பிரதமர் மோடி தெரிவித்துள்ளர்.

English summary
A powerful earthquake has hit the southern part of Turkey. The US Geological Survey reported that it had a magnitude of 7.9, according to AFP news agency. The epicenter of the earthquake was at a depth of 9 kilometers and there was no immediate information about casualties.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X