• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அலாஸ்காவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு வாபஸ்

By Siva
|

Powerful quake triggers tsunami warning in Alaska
அலாஸ்கா: அமெரிக்காவில் உள்ள அலாஸ்கா மாநிலத்தின் கடற்கரை பகுதியோரம் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 8 ஆக பதிவான நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

அமெரிக்காவின் வடமேற்கு பகுதியில் உள்ள மாநிலம் அலாஸ்கா. அலாஸ்காவில் உள்ள லிட்டில் சிட்கின் தீவில் இருந்து தென்கிழக்கு பகுதியில் 15 மைல்கள் தொலைவில் உள்ள கடற்கரை பகுதியில் திங்கட்கிழமை மதியம் 1 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. 71 மைல் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 8 ஆக பதிவானது.

இதையடுத்து அலாஸ்காவின் கடற்கரை பகுதிகள் மற்றும் அலூஷியன் தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆடக் நகரில் உள்ள அனைவரும் வெளியேற்றப்பட்டனர். ஆனால் சுனாமி எச்சரிக்கை பின்னர் வாபஸ் பெறப்பட்டது.

நிலநடுக்கம் மிகவும் ஆழத்தில் ஏற்பட்டதால் சுனாமி வர வாய்ப்புகள் குறைவு என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். நிலநடுக்கம் ஏற்பட்ட பிறகு 2 மணிநேரத்தில் 17 முறை நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன. இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருட் சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை.

அமெரிக்காவில் உள்ள மாநிலங்களிலேயே அலாஸ்காவில் தான் ஒரு ஆண்டில் பலமுறை நிலநடுக்கம் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

 
 
 
English summary
Powerful quake measuring 8 in the Richter scale hit Alaska on monday. Tsunami warning was issued and withdrawn later.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X