For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மண்டேலா இறுதிச் சடங்கு: ஜோகன்னஸ்பர்க்கில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி!

By Mathi
Google Oneindia Tamil News

Pranab Mukherjee
ஜோகன்னஸ்பர்க்: மறைந்த தென்னாப்பிரிக்க அதிபர் நெல்சன் மண்டேலாவின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஜொகன்னஸ்பர்க் சென்றடைந்தார்.

நுரையீரல் தொற்று நோயால் பாதிக்கப்பட்ட நெல்சன் மண்டேலா கடந்த 6-ந்தேதி காலமானார். அவரது இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உள்பட 53 நாடுகளை சேர்ந்த பல்வேறு நாட்டுத் தலைவர்கள் ஜோகன்னஸ்பெர்க் சென்றுள்ளனர். அங்கு நடைபெறும் இரங்கல் நிகழ்ச்சியில் பிரணாப் உரையாற்றுகிறார்.

அத்துடன் அமெரிக்க அதிபர் ஒபாமா, பிரேசில் நாட்டுத் தலைவர் டில்மா ரூசெப், நமீபியாவைச் சேர்ந்த போஹாம்பா, கியூபாவைச் சேர்ந்த ரவுல் காஸ்ட்ரோ மற்றும் சீன துணை அதிபர் லீ யுவான்சாவ் ஆகியோரும் மண்டேலா இரங்கல் கூட்டத்தில் உரையாற்ற உள்ளனர்.

மேலும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ், வர்த்தக அமைச்சர் ஆனந்த சர்மா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரி, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் சதீஷ் மிஷ்ரா ஆகியோரும் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள உள்ளனர்.

English summary
President Pranab Mukherjee arrived here on Tuesday to attend a memorial service in honour of South Africa's anti-apartheid icon Nelson Mandela, whose death triggered an unprecedented outpour of rich tributes worldwide.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X