For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அம்பானி மகள் படித்த பல்கலைக்கழகத்தில் துப்பாக்கியுடன் ஒருவர் சுற்றுவதாக வந்த போனால் பரபரப்பு

By Siva
Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்காவில் உள்ள ஏல் பல்கலைக்கழகத்திற்குள் துப்பாக்கி ஏந்திய நபர் இருப்பதாக வந்த தொலைபேசி அழைப்பால் பரபரப்பு ஏற்பட்டது.

அமெரிக்காவின் கனக்டிகட் மாநிலத்தில் உள்ள நியூ ஹேவன் நகரில் உள்ளது ஏல் பல்கலைக்கழகம். நேற்று காலை 9.48 மணிக்கு பல்கலைக்கழகம் அருகில் உள்ள தொலைபேசி பூத்தில் இருந்து நியூ ஹேவன் போலீசாருக்கு ஒரு அழைப்பு வந்தது. எடுத்து பேசியபோது அந்த நபர் ஏல் பல்கலைக்கழகத்தில் உள்ள விடுதியில் தன்னுடன் ஒரே அறையில் தங்கியிருக்கும் நபர் மக்களை துப்பாக்கியால் சுடத் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதையடுத்து போலீசார் பல்கலைக்கழகத்திற்கு விரைந்து வந்து துப்பாக்கியுடன் சுற்றும் நபரை தேடி அலைந்தனர். போலீசார் எச்சரிக்கை விடுத்த சில நிமிடத்தில் கையில் துப்பாக்கியுடன் சென்ற ஒருவரை தான் பார்த்தாக பல்கலைக்கழக ஊழியை ஒருவர் தெரிவித்தார். அவர் பார்த்தது துப்பாக்கியுடன் திரியும் நபரை தேடிய போலீஸ்காரரை என்பது பிறகு தெரிய வந்தது.

பல்கலைக்கழகம் மூடப்பட்டு தேடுதல் வேட்டை தீவிரமாக நடந்தது. ஆனால் துப்பாக்கியுடன் யாரும் சிக்கவில்லை. இதையடுத்து அந்த அழைப்பு போலியானது என்று தெரிய வந்தது. என சில மணிநேரம் கழித்து பல்கலைக்கழகம் மீண்டும் திறக்கப்பட்டது. இந்த பல்கலைக்கழகத்தில் படித்த தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் மகள் அண்மையில் தான் பட்டம் பெற்றார்.

முன்னதாக ஏல் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நடிகர் ஷாருக்கான், முகேஷ் அம்பானியின் மனைவி நீதாவுடன் தனி விமானம் மூலம் அமெரிக்கா சென்றார். அப்போது தான் அவரை விமான நிலையத்தில் பிடித்து வைத்து இமிகிரேஷன் அதிகாரிகள் 2 மணி விசாரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The Yale University in New Haven, Connecticut issued an alert on Monday to its students and faculty members after reports of a gunman on the campus emerged.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X