For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்க அதிபர் தேர்தலில் விறுவிறுப்பான முன் வாக்குப் பதிவு.. ஹிலரிக்கு சாதகமான அலை! #USElection2016

By Shankar
Google Oneindia Tamil News

வாஷிங்டன்(யு.எஸ்): அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்கூட்டியே வாக்கு பதிவு செய்யும் முறையில் ஏழு மில்லியனுக்கும் மேலான வாக்காளர்கள் வாக்களித்துள்ளார்கள். இதுவரை பதிவான வாக்குகளில் ஹிலரியின் ஜனநாயகக் கட்சியினரின் வாக்குகள் அதிக அளவில் பதிவாகியுள்ளது.

அமெரிக்காவில் தேர்தல் நாளில் அரசு விடுமுறை எல்லாம் கிடையாது. தனியார் அலுவலகங்கள் உட்பட அனைத்து அலுவலகங்களிலும் வாக்களிக்க ஒரிரு மணி நேரம் அனுமதி கிடைக்கும்.

Pre poll starts in US

அதே சமயத்தில் தேர்தல் நாளுக்கு முன்னதாகவே சென்று வாக்களிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சில மாநிலங்களில், ஒரு மாதத்திற்கு முன்னதாகவே வாக்கு பதிவுகள் ஆரம்பமாகிவிடும். குறிப்பிட்ட சில வாக்குச்சாவடிகள் முன் வாக்குப் பதிவுக்கு திறந்து வைக்கப்படுகின்றன.

உரிய அடையாள அட்டையை காண்பித்து வாக்குச்சீட்டுகளில் அல்லது வாக்கு எந்திரத்தில் வாக்களிக்க வேண்டும். வாக்களித்தவர்களின் பெயர்கள் உடனுக்குடன் பட்டியலில் சேர்க்கப்படும். யாரெல்லாம் இன்னும் வாக்களிக்க வில்லை என்ற தகவலும் கட்சியினருக்கு கிடைக்கும்.

ஜனநாயகக் கட்சியினர்களில் பெரும்பாலோனோர் குறைந்த ஊதியத்திற்கும் நாள் சம்பளத்திற்கும் வேலைக்குச் செல்பவர்கள் என்பதால், தேர்தல் நாளன்று வாக்களிக்க வருவதற்கு, சிரமமாக இருக்கும். ஆகவே முன்னதாகவே சனி ஞாயிறு அல்லது விடுமுறை நாளில் வாக்களித்து விடுகிறார்கள்.

வாக்காளர் பதிவின்போது எந்தக் கட்சியை சார்ந்தவர் என்றும் அல்லது எந்தக் கட்சியையும் சாராதவர் என்றும் குறிப்பிடலாம், யாரெல்லாம் தமதுக் கட்சிக்காரர், அவர் வாக்களித்து விட்டாரா இல்லையா என்பதுவும் எளிதில் தெரிந்து விடும்.

தேர்தல் நாள் வரையிலும், முன் வாக்குப் பதிவுக்கு போனில் அழைத்து நினைவு படுத்தும் பணியும் ஜோராக நடக்கும். அக்கம் பக்கம் வசிக்கும் எந்தக் கட்சியையும் சாராதவர்களையு வளைத்துப் போட்ட உள்ளூர் கட்சித் தொண்டர்கள் களப்பணியாற்றுவார்கள்.

முடிந்த வரையிலும் முன் வாக்குப் பதிவிலேயே பெரும்பான்மையான வாக்குகளை சேர்த்துவிட முயற்சிகள் நடக்கும்.

பதிவான வாக்குகளின் படி, கடும் போட்டி நிலவும் வட கரோலைனா, நெவடா, அரிசோனா மாநிலங்களில் ஹிலரி ஆதரவாளர்கள் முன்னிலை வகிக்கிறார்கள். அயோவாவில் ட்ரம்ப் முன்னிலையில் இருக்கிறார்.

ஃப்ளோரிடாவில் ட்ரம்பின் குடியரசுக் கட்சியினர் சற்று அதிகமாக வாக்களித்துள்ளனர்.

ஹிலரிக்கும் ட்ரம்புக்கும் இடையேயான வித்தியாசம் மிகக் குறைவாக இருப்பதாக கணிப்புகள் கூறுகின்றன.

ஃப்ளோரிடாவை வென்றாலும், ஒஹாயோ, வட கரோலைனா, நெவடா மற்றும் பென்சில்வேனியா ஆகிய மாநிலங்களில் வென்றால் தான் ட்ரம்ப் வெற்றி பெற முடியும்.

பென்சில்வேனியாவில் ஹிலரியின் வெற்றி உறுதியாகிவிட்டதாக கணிப்புகள் தெரிவிக்கின்றன. வட நெவடா மற்றும் கரோலைனாவிலும் ஹிலரியே முன்னிலையில் இருக்கிறார்.

இந்த தேர்தலில் ஃப்ளோரிடாவின் வெற்றி முக்கியம் என்றாலும், அது இல்லாமலேயே ஹிலரி அதிபர் ஆகும் நிலையில் இருக்கிறார். அரிசோனா, யூட்டாவையும் வென்றால் ஹிலரியின் வெற்றி வரலாற்று சிறப்பு மிக்கதாக மாறும்.

இங்கே தேர்தலுக்கு விடுமுறை விட்டால் கூட, குடும்பத்துடன் சுற்றுலா செல்லும் தமிழக வாக்காளர்கள். மத்தியில், விடுமுறை நாள் அல்லது அனுமதி வாங்கிக் கொண்டு முன்னதாகவே வாக்களிக்கும் அமெரிக்கக் குடிமக்கள் அங்கே.

எதையெல்லாமோ மேற்கத்திய நாடுகளைப் பார்த்து காப்பி அடிக்கும் நம் மக்கள் ஜனநாயகக் கடமையையும் அங்கிருந்து காப்பி அடித்தால் தவறில்லை!

- நமது அமெரிக்க செய்தியாளர்

English summary
In the US Presidential election, the pre-poll (for the convenient of voters) is going in brisk phase in several states.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X