For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போரைவிட மோசமானது கொரோனா.. மீண்டும் ஆட்டம் போடும் வைரஸ்.. பரவலைத் தடுக்க ஒரே போடாக போட்ட சீனா

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: சீனாவில் கடந்த சில வாரங்களாக வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக அங்கு பல்வேறு பகுதிகளிலும் போர்க்கால அடிப்படையில் பல புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

Recommended Video

    திடீரென அதிகரிக்கும் Coronavirus பாதிப்புகள்.. உலக நாடுகளை அச்சுறுத்தும் AY.4.2 Variant

    கொரோனா பாதிப்பை இன்னும் எந்த நாட்டினாலும் முழுமையாக ஒழிக்க முடியவில்லை. சில நாடுகள் மட்டுமே வைரஸ் பாதிப்பைச் சிறப்பான நடவடிக்கைகள் மூலம் கட்டுக்குள் வைத்துள்ளன.

    கொரோனா தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருப்பதால் அதைக் கட்டுப்படுத்துவது சவாலான ஒன்றாக உள்ளது. இதனால் பின்தங்கிய நாடுகள் தொடங்கி வளர்ந்த நாடுகள் கூட வைரஸை கட்டுப்படுத்த திணறி வருகின்றன.

    ஸ்லீவ்லெஸ்தான் போடனும்.. தேர்வு எழுத போன பெண் ஆடையை வெட்டிய வாட்ச்மேன்.. தேசிய மகளிர் ஆணையம் விசாரணை ஸ்லீவ்லெஸ்தான் போடனும்.. தேர்வு எழுத போன பெண் ஆடையை வெட்டிய வாட்ச்மேன்.. தேசிய மகளிர் ஆணையம் விசாரணை

    கொரோனா வைரஸ்

    கொரோனா வைரஸ்

    கடந்த 2019 இறுதியில் சீனாவில் முதலில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ், அதன் பிறகு உலகெங்கும் பரவியது. சீனா எடுத்த தீவிரமான நடவடிக்கைகள் மற்றும் வேக்சின் பணிகளால் வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் வைக்கப்பட்டது. இப்போது சுமார் 2 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சீனாவுக்கே படையெடுக்கத் தொடங்கியுள்ளது கொரோனா வைரஸ். கடந்த சில நாட்களாகவே அங்கு வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

    சீனா

    சீனா

    கடந்த செவ்வாய்க்கிழமை அங்கு 50 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. அதன் பிறகு, நேற்று சுமார் 23 பேருக்கு கொரோனா உறுதியானது, இப்படிக் கடந்த 10 நாட்களில் மட்டும் சுமார் 270க்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இது மற்ற நாடுகளில் இருக்கும் கொரோனா பாதிப்புடன் ஒப்பிடுகையில் குறைவுதான் என்றாலும் கூட. சீனா Zero Corona policyஐ வைத்துள்ளது. இதன் காரணமாக தற்போதையே கட்டுப்பாடுகளை விதிக்க தொடங்கிவிட்டன.

    முழு ஊரடங்கு

    முழு ஊரடங்கு

    சீனாவில் வைரஸ் பாதிப்பு உள்ள பகுதிகளில் ஊரடங்கு அல்லது அதற்கு இணையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ரஷ்ய எல்லையில் அமைந்துள்ள ஹீலோங்ஜியாங் மாகாணத்தில் அமைந்துள்ளது ஹெய்ஹே நகரம். 13 லட்சம் பேரைக் கொண்ட இந்த நகரில் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அத்தியாவசிய தேவைகளைத் தவிர, மற்ற அனைத்து நடவடிக்கைகளுக்கும் தடை விதிக்கப்பட்டன. மேலும், பொதுமக்கள் வெளியூர்களுக்குச் செல்லவும் தடை விதிக்கப்பட்டது. பேருந்து மற்றும் டாக்ஸி சேவைகளை நிறுத்தப்பட்டுள்ளது,

    போர்க்கால முறை

    போர்க்கால முறை

    ஹீலாங்ஜியாங்கில் உள்ள ஜிக்சி மற்றும் முடான்ஜியாங் ஆகிய நகரங்களில் போர்க்கால அடிப்படையில் உயர் கண்காணிப்பு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. அங்கு வைரஸ் பாதிப்பு யாருக்கும் உறுதி செய்யப்படவில்லை என்றாலும் கூட முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தீவிர கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்த இரண்டு நகரங்களில் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த ஒரு வாரமாக இதே நிலைதான்.

    தீவிர கட்டுப்பாடுகள்

    தீவிர கட்டுப்பாடுகள்

    இதன் மூலம் கொரோனா மீண்டும் அதிகரித்துவிடக் கூடாது என்பதில் சீனா எந்தளவு விழிப்புணர்வுடன் இருக்கிறது என்பது தெரிகிறது. அதேநேரம் கடந்த 1.5 ஆண்டுகளாக மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்த சுற்றுலா மற்றும் கேட்டரிங் துறை இப்போது தான் மெல்ல மீண்டு கொண்டிருந்தது. இந்தச் சூழலில் இப்போது மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ள இந்த கட்டுப்பாடுகள் மீண்டும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. இருப்பினும், கொரோனாவை சற்று அலட்சியமாகக் கையாண்டாலும் கூட நிலைமை கையை மீறிச் சென்றுவிடும் என்பதைத் தெளிவாகத் தெரிந்து வைத்துள்ள சீனா, இந்த விஷயத்தில் அவசரம் காட்டத் துளியும் தாயாராக இல்லை.

    English summary
    Coronavirus in China latset updates in Tamil. Corona lockdown in China latset.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X