For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

போருக்கு தயார் ஆகுங்கள்.. வேலையை காட்டும் ஜிங்பிங்.. சீன ராணுவத்திற்கு உத்தரவு.. இதுதான் காரணமா?

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: சீன படைவீரர்கள் எல்லோரும் போருக்கு தயாராக இருங்கள் என்று ஜி ஜிங்பிங் கூறியுள்ளார். அவரின் இந்த பேச்சுக்கு நிறைய காரணங்கள் இருக்கிறது. இதற்கு நிறைய பின்னணிகள் இருக்கிறது என்று கூறுகிறார்கள்.

Recommended Video

    Indi - China issue| போருக்கு தயாராகுங்கள்... China அதிபர் Xi jinping திடீர் உத்தரவு | Oneindia Tamil

    போருக்கு தயாராக இருங்கள்.. உங்கள் பயிற்சியை அதிகப்படுத்துங்கள். படைகள் அனைத்தும் தயார் நிலையில் இருக்க வேண்டும். தங்கள் பலத்தை அவர்கள் அதிகரிக்க வேண்டும்.

    போருக்கான ஆயத்தங்களை ராணுவம் மேற்கொள்ள வேண்டியது அவசியம். ராணுவ நடவடிக்கைகளை செய்ய நாம் தயாராக இருக்க வேண்டும். இதற்கான முழுமையான பயிற்சிகளை நாம் செய்ய வேண்டும்.. இப்படி சொன்னது அமெரிக்க அதிபர் டிரம்ப்போ.. வடகொரியா அதிபர் கிம்மோ இல்லை. சீன அதிபர் ஜிங்பிங்!

    போருக்கு தயார் ஆகுங்கள்.. சீன ராணுவ வீரர்களுக்கு அதிபர் ஜிங்பிங் பகீர் உத்தரவு.. பெரும் பரபரப்பு!போருக்கு தயார் ஆகுங்கள்.. சீன ராணுவ வீரர்களுக்கு அதிபர் ஜிங்பிங் பகீர் உத்தரவு.. பெரும் பரபரப்பு!

    சொன்னது என்ன

    சொன்னது என்ன

    போருக்கு நாம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும். மிக மோசமான விஷயத்திற்கு தயாராக இருக்க வேண்டும். நாம் வித்தியாசமான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். நம் நாட்டு ராணுவத்தில் நாம் புரட்சியை கொண்டு வர வேண்டும். நமது பலத்தை ஒற்றுமையை நிரூபிக்க வேண்டிய நேரம் இது என்று ஜி ஜிங்பிங் கூறியுள்ளார். அவரின் இந்த பேச்சுக்கு நிறைய காரணங்கள் இருக்கிறது. அதில் இந்தியாவும் ஒரு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்திய காரணம்

    இந்திய காரணம்

    சீன அதிபரின் இந்த உத்தரவுக்கு இந்தியா மீதான கோபமும் ஒரு காரணம் ஆகும். இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் லடாக் எல்லையில் கடுமையான மோதல் நிகழ்ந்து வருகிறது. இது எப்போது வேண்டுமானாலும் போராக வெடிக்க வாய்ப்புள்ளது. அங்கு இரண்டு நாட்டு படைகளும் ராணுவத்தை குவித்து வருகிறது. அதோடு சீனா தனது போர் விமானங்களை குவித்து வருகிறது.

    போர் மூளும்

    போர் மூளும்

    பிரதமர் மோடியும் முப்படை தளபதிகளுடன் ஆலோசனை செய்து வருகிறார். இதனால் அங்கு போர் மூளும் அபாயம் உள்ளது என்று கூறுகிறார்கள். அப்படி நடந்தால், அது பெரிய போராக இருக்கும். இந்த போருக்கு தயார் ஆகும் வகையில் ஜிங்பிங் இப்படி கூறியுள்ளார். இது போருக்கான அழைப்பு என்று கூறுகிறார்கள். இந்தியாவிற்கு எதிராக அவர் தனது வேலையை காட்டுகிறார் என்கிறார்கள்.

    அமெரிக்கா காரணம்

    அமெரிக்கா காரணம்

    ஆனால் இன்னொரு பக்கம் இதற்கு அமேரிக்கதான் காரணம் என்கிறார்கள். தென் சீன கடல் எல்லையில் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே சிறு சிறு சண்டை நடந்து வருகிறது. இரண்டு நாட்டு படைகளும் அங்கே போர் கப்பலை குவித்து வருகிறது. அங்கே சீனா அத்துமீறி போர் கப்பல்களை குவித்து உள்ளதாக கூறி அமெரிக்கா இப்படி படைகளை குவித்து வருகிறது. மலேசியாவின் எண்ணெய் கிணறுகளை அச்சுறுத்தும் வகையில் சீனா இப்படி செய்கிறது என்று அமெரிக்கா கூறியுள்ளது.

    தென் சீன கடல் எல்லை

    தென் சீன கடல் எல்லை

    இதனால் அமெரிக்கா, மலேசியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் ஒன்றாக இணைந்து அந்த கடல் பகுதியில் சீனாவிற்கு எதிராக படைகளை குவித்து வருகிறது. அங்கு மூன்று நாட்டு கடற்படை குவிக்கப்பட்டுள்ளது. சீனாவும் தனது ரோந்து பணிகளை அதிகரித்துள்ளது. இதனால் அங்கே அச்சம் அதிகரிக்க அதிகரிக்க, சண்டை நடக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள். இதுவும் கூட ஜிங்பிங் அப்படி போர் குறித்து கூற காரணமாக இருக்கலாம் என்று கூறுகிறார்கள்.

    ஹாங்காங் காரணம்

    ஹாங்காங் காரணம்

    ஆனால் ஜிங்பிங் இப்படி சொல்ல வேறு ஒரு காரணம் உள்ளது என்று கூறுகிறார்கள். ஜிங்பிங் தனது பேச்சில், சீனாவை காக்க, உள்நாட்டு பாதுகாப்பை உறுதி செய்ய, அதன் கட்டமைக்க காக்க என்ன வேண்டுமானாலும் செய்ய அவர்கள் தயாராக இருக்க வேண்டும், என்று கூறியுள்ளார் . அவர் உள்நாட்டில் நடக்கும் பிரச்னையை குறிப்பிட்டுதான் இப்படி பேசி உள்ளார். அதற்குதான் போருக்கு தயாராக இருங்கள் என்று கூறியுள்ளார் என்கிறார்கள்.

    இதுதான் உண்மை காரணம்

    இதுதான் உண்மை காரணம்

    அதன்படி ஹாங்காங்கில் சீனா புதிய பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வர இருக்கிறது. அதன்படி ஹாங்காங்கில் கொண்டு வரப்படும் இந்த புதிய பாதுகாப்பு சட்டம் மூலம், அரசுக்கு எதிராக போராட்டம் செய்பவர்களை கைது செய்ய முடியும். அதிகாரம் மொத்தமாக பெய்ஜிங்கில் குவியும், அரசுக்கு எதிராக பேச முடியாது, வேறு நாட்டுடன் பெரிய தொடர்பை வைத்துக்கொள்ள முடியாது, ஹாங்காங் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படலாம். ஹாங்காங்கின் சுயாட்சியை இது உடைத்து நொறுக்கும்.

    சுயாட்சி கொள்கை

    சுயாட்சி கொள்கை

    ஹாங்காங் சீனாவில் இருந்தாலும் தனி சட்டங்களுடன் சுயாட்சி கொண்ட பகுதியாக உள்ளது. ஆனால் சீனாவின் இந்த புதிய சட்டம் அதை இல்லாமல் செய்யும். இதனால் ஹாங்காங் மக்கள் அங்கு போராட்டம் செய்ய தொடங்கி உள்ளனர். இந்த போராட்டம் காரணமாக சீனாவில் பெரிய அளவில் போராட்டங்கள் வெடிக்கும், கலவரம் நடக்கும் என்கிறார்கள். இது பெரிய உள்நாட்டு போராக மாறும் என்கிறார்கள். இதில்தான் சீனா தனது ராணுவத்தை களமிறக்க முடிவு செய்துள்ளது என்று கூறுகிறார்கள்.

    இதுதான் பின்னணி

    இதுதான் பின்னணி

    மொத்தமாக ஹாங்காங்கின் சுயாட்சியை ரத்து செய்துவிட்டு, சீனாவுடன் அதை இணைக்க ஜிங்பிங் முடிவு செய்துள்ளார். அதனால்தான் போருக்கு தயாராக இருங்கள், உள்நாட்டு அமைதி முக்கியம் என்று ராணுவ வீரர்களுக்கு ஜிங்பிங் அழைப்பு விடுத்துள்ளார் என்று கூறுகிறார்கள். இது சிவில் வாருக்கான அழைப்பு என்கிறார்கள். ஹாங்காங் போராட்டத்தை மனதில் வைத்துதான் ஜிங்பிங் இப்படி பேசியுள்ளார் என்றும் கூறுகிறார்கள்.

    English summary
    ‘Prepare for war’ : Why China’s Xi Jinping said like this all of a sudden?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X