For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நடுவானில்.. உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியை ரசித்துப் பார்த்த ஒபாமா…!

Google Oneindia Tamil News

மின்னபோலிஸ்: அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு ஒரு அரிய வாய்ப்பை அவரது அதிகாரப்பூர்வ விமானமான ஏர்போர்ஸ் ஒன் ஏற்படுத்திக் கொடுத்தது. அமெரிக்கா, ஜெர்மனி இடையிலான உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியை விமானத்தில் பறந்தபடி பார்த்து ரசித்துள்ளார் ஒபாமா.

இந்த காட்சியை புகைப்படம் எடுத்து வெளியிடவும் செய்துள்ளது வெள்ளை மாளிகை.

மற்ற தலைவர்களுக்கு பெரும்பாலும் கிடைக்காத வாய்ப்பு இது. ஆனால் அமெரிக்கா என்ற காரணத்தால் ஒபாமாவுக்கு இது கிடைத்துள்ளது. அவரும் அமெரிக்காவின் ஆட்டத்தை ரசித்துப் பார்த்தார்.. தான் போய்ச் சேர வேண்டிய இடம் வரும் வரை.

ஏர்போர்ஸ் ஒன்

ஏர்போர்ஸ் ஒன்

அமெரிக்க அதிபர்களுக்கான பிரத்யேக விமானம்தான் இந்த ஏர்போர்ஸ் ஒன். இல்லாத வசதிகளே இல்லை இந்த விமானத்தில். அத்தனை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், தகவல் தொடர்பு வசதிகள் என.. ஒரு குட்டி வெள்ளை மாளிகையாக இது செயல்படுகிறது.

கான்பரன்ஸ் ஹாலில்,

கான்பரன்ஸ் ஹாலில்,

மின்னபோலிஸ் நகருக்குச் செல்வதற்காக ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் பயணித்தார் அதிபர் ஒபாமா. அப்போது அவருக்காக கான்பரன்ஸ் ஹாலில், அமெரிக்கா - ஜெர்மனி இடையிலான கால்பந்துப் போட்டி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

கொறித்துக் கொள்ள சிப்ஸ்

கொறித்துக் கொள்ள சிப்ஸ்

நேரடியாக ஒளிபரப்பான இந்தப் போட்டியை ரசித்துப் பார்த்தார் ஒபாமா. அவருடன் அவரது உதவியாளர்களும் ரசித்துப் பார்த்தனர். போட்டியைப் பார்க்கும்போது கொறித்துக் கொள்வதற்காக ஏகப்பட்ட சிப்ஸ், ஸ்னாக்ஸ்களும் அவர்களுக்காக அளிக்கப்பட்டது.

விமானம் தரையிறங்கியபோது

விமானம் தரையிறங்கியபோது

மின்னபோலிஸ் நகரில் விமானம் தரையிறங்கியபோது போட்டியும் முடிவடைந்தது. இந்தப் போட்டியில் ஜெர்மனி அணி, தாமஸ் முல்லர் போட்ட அபாரமான கோல் காரணமாக 1-0 என்ற கணக்கில் வென்றது.

அமெரிக்கா தோற்றாலும்

அமெரிக்கா தோற்றாலும்

ஜி பிரிவில் இடம் பெற்றுள்ள அமெரிக்கா இப்போட்டியில் தோற்றாலும் கூட இன்னொரு போட்டியில் போர்ச்சுகல் அணி கானாவை 2-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்ததால் 2வது இடத்தைப் பிடித்துஅடுத்த சுற்றுக்கு முன்னேறியது அமெரிக்கா.

நம்ம ஊர் கேபிஎன் பஸ்ஸில் வீடியோ பார்த்ததோடு சரி.. நாமெல்லாம்!!

English summary
Air Force One gave President Barack Obama an advantage that wasn't available to many other frequent flyers Thursday: the opportunity to watch some of the World Cup soccer match between the United States and Germany. About midway through the approximately two-and-a-half-hour flight, aides brought still photographers to Obama's airborne conference room to capture him watching the match. Bowls of chips and other snacks were laid out on the table.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X