For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆட்டுக்கும், பப்பாளி பழத்துக்கும் கொரானாவோ.. நாங்க ஃப்ரி ஆகி விட்டோம்.. அறிவித்தார் தான்சானிய அதிபர்

தொற்றே இல்லாத நாடாக உருவெடுத்துவிட்டது தான்சானியா

Google Oneindia Tamil News

டொடோமா: ஆட்டுக்கும், பப்பாளி பழத்துக்கும் கொரோனாவா என்று ஒட்டுமொத்த நாடே அன்று அலறியது.. ஆனால், இன்றோ, "சாத்தானின் வேலையை தெறிக்க விட்டுவிட்டோம்" என்று தான்சான்யா கெத்து காட்டி வருகிறது.. அந்த நாடு கொரோனாவில் இருந்து முழுசுமாக விடுதலை அடைந்து தொற்றே இல்லாத மாறிவிட்டது.. இதைதான் பெருமிதமாக அந்நாட்டு அதிபர் இவ்வாறு சொல்லி உள்ளார்.

இவ்வளவு மாதமாக ஆட்டுவித்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸால் உலக நாடுகளே திணறிவிட்டன.. லட்சக்கணக்கானோரை இந்த வைரஸ் காவு வாங்கினாலும் இன்னும் மருந்து கண்டுபிடிக்க வழியில்லை. எப்படியோ அடுத்த வருடம் ஆகிவிடுமாம். அதற்காக இப்போதே ஆயிரக்கணக்கான ஆராய்ச்சியாளர்கள் தங்களை அர்ப்பணித்து கொண்டு வேலை பார்த்து வருகின்றனர்.

president claims tanzania is free from covid-19

இதனிடையே மருந்தே இன்னும் கண்டுபிடிக்காத நிலையில், சில நாடுகள் மொத்தமாகவே விரட்டி அடித்து கொண்டு வருகின்றன.. இதில் முதலில் குட் புக்கில் இடம்பெற்றது நியூசிலாந்துதான். இதற்கு முக்கிய காரணம் அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தாவின் துடிப்பான விடாமுயற்சியும், அதற்கு மக்கள் அளித்த முழு ஒத்துழைப்பும்தான்.

அதேபோல மற்றொரு நாடாக தான்சானியா திகழ்கிறது.. ஆரம்பத்தில் இந்த நாட்டில் ஏகப்பட்ட தொற்று வந்ததாக சொல்லப்பட்டது.. இத்தனை பேர் பாதிப்பா என்று அதிபர் ஜான் மகுபூலியே அலறிவிட்டார்.. இறக்குமதி செய்யப்பட்ட அந்த டெஸ்ட் கருவிகள் மீது அதிபருக்கு சந்தேகம் வந்தது.. அதனால் ஆடு, பப்பாளிப் பழத்தில் இருந்து எடுத்த மாதிரிகளை மனிதர்களின் பெயரில் பரிசோதனை நிலையத்துக்கு அனுப்பினர்.

Recommended Video

    கொரோனா இல்லாத நாடானது நியுசிலாந்து... எப்படி சாத்தியப்படுத்தியது ?

    அந்த ரிசல்ட்டில் பப்பாளிப் பழத்துக்கும் கொரோனா, ஆடுகளுக்கும் கொரோனா என்று வரவும் ஒட்டுமொத்த நாடும் அதிர்ச்சியடைந்தது.. அதன்பிறகுதான், அந்த டெஸ்ட் கருவிகளே தவறு என்று கண்டுபிடிக்கப்பட்டது. இதெல்லாம் ஆரம்பத்தில் நடந்து முடிந்த நிலையில், அந்நாட்டு இப்போது நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளது..

    உலக நாடுகளில் பகீர்.. ஒரு நாள் கொரோனா பாதிப்பு திடீரென கிடுகிடு உயர்வு- இந்தியா 3-வது இடம் உலக நாடுகளில் பகீர்.. ஒரு நாள் கொரோனா பாதிப்பு திடீரென கிடுகிடு உயர்வு- இந்தியா 3-வது இடம்

    காரணம், இதுவரை இங்கு 509 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தனர்.. இதில் 29 பேர் உயிரிழந்திருந்தனர்... இப்படி ஒரு சாதனையை செய்ததற்காக அந்நாட்டின் அதிபர் ஜான் மகுபூலி "சாத்தானின் வேலையை தான்சானியா தோற்கடித்து விட்டது" என்று மார்தட்டி சொல்லி உள்ளார்.. அந்த வகையில் தொற்றே இல்லாத நாடாக பட்டையை கிளப்பி கொண்டு இருக்கிறது தான்சானியா!

    English summary
    coronavirus: president claims tanzania is free from covid-19
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X