For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அடடா.. ஜஸ்ட் மிஸ்ஸு.. டெக்ஸாஸில் டிரம்ப் கை ஓங்குகிறது.. சர்வேயில் பிடனுக்கு பின்னடைவு

டெக்ஸாஸில் டிரம்ப் கை ஓங்குவதாக சர்வே முடிவு தெரிவித்துள்ளது

Google Oneindia Tamil News

டெக்ஸாஸ்: அமெரிக்க அதிபர் தேர்தல் நாளுக்கு நாள் சுவாரஸ்யமாகி வருகிறது. ஜோ பிடனுக்கு சாதகமானவை எவை, அதிபர் டிரம்ப்புக்கு சாதகமானவை என்ற அலசல் அதிகரித்து வருகிறது.

இப்படித்தான் டெக்ஸாஸ் மாகாணத்தில் ஒரு சர்வே நடத்தப்பட்டது. அதில் 5 புள்ளிகள் வித்தியாசத்தில் டிரம்ப் முன்னிலை வகித்து வருவதாக தெரிவித்துள்ளனர். டெக்ஸாஸ் மாகாண வாக்காளர்களிடையே இந்த கருத்துக் கணிப்பு நடத்தி முடிவை தெரிவித்துள்ளனர்.

President Donald Trump ahead of Joe Biden by 5 points in Texas: Poll

இரு தலைவர்களுக்கும் இடையிலான மக்கள் செல்வாக்கை அறியும் முகமாக இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தின் ஹாபி ஸ்கூல் பொது விவகாரத்துறையினர் இந்த கருத்துக் கணிப்பை நடத்தினர். திங்கள்கிழமை இரவு இந்த முடிவு வெளியிடப்பட்டது. நம்ம ஊர் கணக்குப்படி இன்று காலை வெளியானது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் 59 மில்லியன் பேர் முன்கூட்டியே வாக்குப்பதிவு - வெள்ளை மாளிகை யாருக்கு?அமெரிக்க அதிபர் தேர்தலில் 59 மில்லியன் பேர் முன்கூட்டியே வாக்குப்பதிவு - வெள்ளை மாளிகை யாருக்கு?

அதில் டிரம்ப்புக்கு ஆதரவாக 50 சதவீத வாக்காளர்கல் உள்ளனர். அதேபோல பிடனுக்கு ஆதரவாக 44.7 சதவீத வாக்காளர்கள் உள்ளனர். அக்டோபர் 13, அக்டோபர் 20 ஆகிய இரு நாட்கள் இந்த கருத்துக் கணிப்பை நடத்தியுள்ளனர் என்று கருத்துக் கணிப்பை நடத்திய டீம் கூறியுள்ளது.

கிட்டத்தட்ட 1000 பேரிடம் இந்தக் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டதாகவும், அனைவருமே இந்தத் தேர்தலில் வாக்களிக்க உள்ள வாக்காளர்கள் என்றும் இந்தக் குழு தெரிவித்துள்ளது.

English summary
President Donald Trump ahead of Joe Biden by 5 points in Texas: Poll
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X