For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'உணவு பற்றாக்குறை.. எல்லாரும் கம்மியா சாப்பிடுங்க, இல்லைனா தொலைச்சுபுடுவேன்..' ஷாக் தந்த கிம் ஜாங்

Google Oneindia Tamil News

பியோங்யாங்: வடகொரியாவில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டுள்ள நிலையில், வரும் 2025 வரை மக்கள் குறைவான அளவு உணவைச் சாப்பிடுமாறு அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் அந்நாட்டு மக்களிடம் அறிவுறுத்தியுள்ளார்.

Recommended Video

    North Korea-வில் தலைவிரித்தாடும் பஞ்சம்.. Kim Jong Un மக்களுக்கு புது உத்தரவு

    வட கொரியாவில் பல ஆண்டுகளாகவே மோசமான பொருளாதார பாதிப்பு நிலவி வருகிறது. சர்வாதிகார ஆட்சி நடைபெறும் வடகொரியா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது.

    ஆர்யன் கான் வழக்கில் பேரம்.. '8 மணி நேரம்' முக்கிய சாட்சி அளித்த பரபரப்பு வாக்குமூலம் ஆர்யன் கான் வழக்கில் பேரம்.. '8 மணி நேரம்' முக்கிய சாட்சி அளித்த பரபரப்பு வாக்குமூலம்

    இதனால், வடகொரியா மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளுடன் வர்த்தகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் கடந்த சில ஆண்டுகளாகவே அந்நாடு மோசமான பாதிப்பை எதிர்கொண்டுள்ளது.

    வடகொரியா

    வடகொரியா

    வடகொரியா பெரும்பாலும் சீனாவையே நம்பியிருந்தது. அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகள் பொருளாதாரத் தடையால் வடகொரியாவை கண்டுகொள்ளவில்லை என்றாலும் கூட சீனா, வடகொரியாவுக்குப் பெரியளவில் உதவியாக இருந்தது. கடந்த சில ஆண்டுகளாகவே வடகொரியாவுடன் வர்த்தகம் செய்யும் ஒரு சில நாடுகளில் முக்கியமானதாகச் சீனா இருந்தது. வடகொரியா பல்வேறு விஷயங்களிலும் சீனாவையே பெரிதும் நம்பியிருந்தது.

    சீனா

    சீனா

    இந்தச் சூழலில் கொரோனா பாதிப்பு நிலைமையை அப்படியே மாற்றிவிட்டது. வடகொரியாவுக்குச் சீனா உடனான வர்த்தகமும் நின்று போனது. இதனால் வடகொரியாவில் பல்வேறு பொருட்களின் விலை விண்ணை மூட்டும் அளவுக்கு உயரத் தொடங்கியது. குறிப்பாக வடகொரியாவில் நிலவும் உணவுப் பொருட்கள் பற்றாக்குறையால், அந்நாட்டில் வசிக்கும் மக்களின் உணவு தேவையைக் கூட பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு உணவுப் பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

     குறைவாகச் சாப்பிடுங்கள்

    குறைவாகச் சாப்பிடுங்கள்

    இது குறித்து அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் நாட்டு கூறுகையில்,"நமது நாட்டின் விவசாயிகள் அரசின் தானிய உற்பத்தித் திட்ட இலக்கை எட்ட தவறிவிட்டனர். இதனால் தான் நாட்டில் மிகப் பெரிய அளவுக்கு உணவுப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார். மேலும், வரும் 2025 வரை மக்கள் குறைவான அளவு உணவைச் சாப்பிடுமாறு கிம் ஜாங் உன் அந்நாட்டு மக்களிடம் அறிவுறுத்தியுள்ளார்.

     என்ன காரணம்

    என்ன காரணம்

    வடகொரியாவில் ஏற்பட்டுள்ள இந்த உணவுப் பஞ்சம் விவசாய துறையை மட்டுமே ஒரு காரணமாகச் சொல்ல முடியாது. உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் ஆகியவற்றை சீனாவில் இருந்தே சென்று கொண்டிருந்தது. இருப்பினும், கொரோனா அச்சம் காரணமாகச் சீனா உடனான தொடர்பை முற்றிலுமாக துண்டித்துக் கொண்டது. கடந்த ஆண்டு முதலே சீனா உடன் வடகொரியா எந்தொரு வர்த்தகத்திலும் ஈடுபடவில்லை. இதனால் ஏற்பட்ட பற்றாக்குறையாலேயே உணவுப் பொருட்களின் உற்பத்தி மிகவும் குறைந்துள்ளது.

     எப்போது சரியாகும்

    எப்போது சரியாகும்

    அது மட்டுமின்றி உலக நாடுகளின் பொருளாதாரத் தடையும், கடந்த ஆண்டு வடகொரியாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளமும் கூட இதற்குக் காரணம், நிலைமை இப்படி இருந்தாலும் கூட வரும் 2025 வரையிலும் கூட சீனா உடன் வடகொரியாவால் பழையபடி வர்த்தகத்தை மேற்கொள்ள முடியாது என்றே வல்லுநர்கள் கருதுகின்றனர். இதனால் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கும் வடகொரியாவில் பஞ்சம் தொடரும் என்றே கணிக்கப்பட்டுள்ளது.

    எச்சரிக்கை

    எச்சரிக்கை

    வடகொரியாவில் இப்போதே காய்கறி, பழங்கள் உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. நாடு தற்போது இருக்கும் நிலையை உணர்ந்து, இதர நாடுகள் உடன் சமூகமான உறவை மேம்படுத்த அதிபர் கிம் ஜாங் உன் முயல வேண்டும். இல்லையென்றால் வரும் காலங்களில் இதைவிட மோசமான பாதிப்பை வடகொரியா சந்திக்க நேரிடும் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

    English summary
    North Korean leader Kim Jong Un asked the people to eat less, amid food crisis. North Korea Food crisis latest updates in tamil.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X