For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்றார் இம்ரான் கான்.. மந்திரிசபையை அறிவித்தார்!

பாகிஸ்தான் பிரதமராக கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் பதவியேற்றுள்ளார்.

By Rajeswari
Google Oneindia Tamil News

பாகிஸ்தான்: பாகிஸ்தான் பிரதமராக கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் பதவியேற்றுள்ளார். நேற்று அவர் தனது அமைச்சரவையை அறிவித்தார்.

பாகிஸ்தான் நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் கராச்சியில் போட்டியிட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் நிறைய இடங்களில் வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து கூட்டணி கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்கிறார்.

Prime Minister Imran Khan has declared his cabinet as the 22nd Prime Minister

பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் 272 இடங்களில் கடந்த ஜூலை 26ஆம் தேதி நடைபெற்றது. அதில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் தெஹ்ரிக் இ இன்சாப், நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக், மறைந்த முன்னாள் பிரதமர் பெனாசிர் மகன் பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகியவை போட்டியிட்டன. அவர்களில் நிறைய இடங்களில் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் வெற்றி பெற்றார் .

உலகிலேயே ஒரு கிரிக்கெட் வீரர் ஒரு நாட்டின் பிரதமர் ஆகியிருப்பது இதுவே முதல் முறை. இதைத்தொடர்ந்து நேற்று இஸ்லாமாபாத்தில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நடந்த பதவி ஏற்பு விழாவில், இம்ரான் கான் பாகிஸ்தானின் 22-வது பிரதமராக பதவியேற்றுள்ளார்.

இம்ரான் கானுக்கு ஜனாதிபதி மம்னூன் உசேன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.இதைத்தொடர்ந்து , இருபது பேர் கொண்ட தன்னுடைய மந்திரிசபையை இம்ரான் கான் அறிவித்துள்ளார். அதில், பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை மந்திரியாக பர்வேஸ் கட்டாக், நிதி மந்திரியாக ஆசாத் உமர் மற்றும் வெளியுறவுத்துறை மந்திரியாக மக்தூம் ஷா மகமுது ஹூசைன் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தான் மந்திரிசபையில் 15 பேர் மந்திரிகளாகவும், 5 பேர் ஆலோசகர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் நாளை மந்திரிகளாக பதவியேற்பார்கள் என தெக்ரீக்-ஈ-இன்சாப் கட்ரியின் செய்தித்தொடர்பாளர் ஃப்வாத் சௌத்ரி தெரிவித்துள்ளார்.

English summary
Imran Khan was sworn in as the 22nd Prime Minister of Pakistan at the Presidential Palace in Islamabad yesterday. Imran Khan was sworn in by president Mamnoon Hussein.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X