For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாடாளுமன்றத்தில் 3 வயது குழந்தையுடன் ஒளிந்து விளையாடும் பிரதமர்!

By BBC News தமிழ்
|

தனது 3 வயது குழந்தையுடன் அலுவலகம் வந்த கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, புகழ்பெறுவது எப்படி என மற்றும் ஒரு முறை உலக தலைவர்களுக்கு சுட்டிக் காட்டியுள்ளார் .

பிரதமர் என்பவருக்கு ஒயாமல் பணிகள் இருந்து கொண்டுதான் இருக்கும். அன்றைய நாளில் ஆதரவாளர்களுடனான கூட்டம், நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவது, பல்கலைக்கழக தலைவர்களுடன் சந்திப்பு என பல பணிகள் இருந்த போதும் தன் மகனுடன் ஒளிந்து கொள்ளும் விளையாட்டை விளையாடவும் அவருக்கு நேரம் கிடைத்துள்ளது.

மூன்று வயது அட்ரீயாங் ட்ரூடோ, பிரதமர் அலுவலகத்தின் மார்பிள் பால்கனி உட்பட அனைத்து இடத்தையும் சுற்றி வந்த புகைப்படம் சமூக ஊடகத்தில் பகிரப்பட்டு பலரையும் கவர்ந்துள்ளது.

தந்தையும் மகனும் சேர்ந்து ஊடகத்தையும், அரசியல்வாதிகளையும் எதிர்கொள்ளும் புகைப்படமும் அதில் அடங்கும்.

"மிகவும் அற்புதம், உங்களுடைய தந்தையின்(ட்ரூடோவின் தந்தை முன்னாள் பிரதமர்) புகைப்படத்தையும், உங்களின் புகைப்படத்தையும் பார்த்த ஞாபகம் இருக்கிறது; அந்தளவிற்கு எனது வயதும் உள்ளது" என முகநூலில் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

"இது விளம்பரத்திற்கான செயலோ இல்லையோ ட்ரூடோவை ஒரு குடும்பஸ்தர் என்று கூறி கொள்ளலாம்" என மற்றொரு கருத்து வெளியிடப்பட்டுள்ளது.

45 வயதாகும் ஜஸ்டின் ட்ரூடோ அவ்வப்போது தனது செய்கையால் இணையத்தில் புகழ்பெறுவது வழக்கம். எனவே இது அவருக்கு முதல் முறையன்று.

லிபரல் கட்சியைச் சேர்ந்த ஜஸ்டின் ட்ரூடோ சிரிய அகதிகளுக்கு ஆதரவு வழங்கிய போதும், ஓரினச் சேர்கையாளர்களுக்கான பேரணியில் கலந்து கொண்ட போதும், தான் ஒரு பெண்ணியவாதி என்று வெளிப்படையாக தெரிவித்த போதும், தனது ஆதரவாளர்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்றார்.

கடந்த வாரம் சிரிய அகதி ஒருவர் தன் குழந்தைக்கு ஜஸ்டினின் பெயரை சூட்டினார். குவாண்டம் கம்பூயுட்டிங் பற்றி அவர் சட்டென அளித்த பதிலும், ட்ரம்பின் கை குலுக்கலை லாவகமாக எதிர்கொண்ட போதும் அவர் பாராட்டுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ட்ரூடோ பற்றிய பிற செய்திகள்:

35 ஆண்டுக்குப் பிறகு பள்ளி நண்பரை குத்துச்சண்டைக்கு அழைத்த பிரதமர்!

கனடா பிரதமரின் பெயரை குழந்தைக்கு சூட்டிய சிரியா அகதிகள்

BBC Tamil
English summary
Prime Minister of Canada and internet darling Justin Trudeau has shown the rest of the world's leaders how to do publicity once again - by bringing his three-year-old to the office.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X