For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மலேசியா சென்றார் பிரதமர் மோடி.. அந்நாட்டு பிரதமருடன் இன்று சந்திப்பு!

மலேசியா சென்றுள்ள பிரதமர் மோடி இன்று அந்நாட்டு பிரதமர் மஹதீர் முகமதுவை சந்திக்கிறார்.

Google Oneindia Tamil News

கோலாலம்பூர்: மலேசியா சென்றுள்ள பிரதமர் மோடி இன்று அந்நாட்டு பிரதமர் மஹதீர் முகமதுவை சந்திக்கிறார்.

பிரதமர் மோடி கிழக்கு ஆசிய நாடுகளான இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் 5 நாள் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று முன்தினம் அவர் இந்தோனேசியா சென்றார்.

Prime Minister Modi arrives Malaysia

நேற்று அவர் அந்நாட்டின் அதிபர் ஜோகோ விடோடோவை தலைநகர் ஜகார்த்தாவில் சந்தித்து பேசினார். இரு தலைவர்களும் ராணுவம், கடல் சார் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றில் ஒத்துழைத்து செயல்படுவது பற்றி விரிவான பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் இது தொடர்பான ஒப்பந்தங்களும் கையெழுத்தாயின.

இந்த நிலையில், இந்தோனேசியா பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி, மலேசியா புறப்பட்டுச்சென்றார். தலைநகர் கோலாலம்பூர் சென்றுள்ள மோடி, அண்மையில் மலேசிய பிரதமராக தேர்வு செயய்பட்ட மஹதீர் முகம்மதுவை பிரதமர் மோடி சந்திக்கவுள்ளார்.

அப்போது இருநாடுகளுக்கு இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என கூறப்படுகிறது. ஏற்கனவே கடந்த 2015 ஆம் ஆண்டு மலேசியாவில் சுற்றுப்பயணம் செய்து இருந்த பிரதமர் மோடி, இரண்டாவது முறையாக அங்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Prime Minister Modi arrives Malaysia. He will meet Malaysian president mahathir mohamad today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X