For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மலேசியா: 60 ஆண்டுகால ஒரே கட்சி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி.. எதிர்க்கட்சி கூட்டணி சாதனை வெற்றி!

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    மலேசியா தேர்தல், மகதீர் முகமது கட்சி சாதனை வெற்றி!-வீடியோ

    கோலாலம்பூர்: மலேசியாவில் நடந்த பொது தேர்தலில், அந்நாட்டின் முன்னாள் பிரதமர் மகதீர் முகமது வெற்றி பெற்றுள்ளார். வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பெற்றுள்ளார் 92 வயதாகும் மகதீர் முகமது.

    நாட்டின் புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்காகவும், 222 நாடாளுமன்ற உறுப்பினர்கள்களை தேர்வு செய்வதற்கும் இந்த தேர்தல் நடைபெற்றது.

    பிரதமர் நஜீப் ரஸாக் ஆளும் பிஎன் கட்சிக்கும், முன்னாள் பிரதமர் மகதீர் முகமது தலைமையிலான எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. நேற்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்த வாக்குப்பதிவில் 69 சதவிகிதம் பேர் வாக்களித்திருந்தனர். இதனை தொடர்ந்து வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. இன்று தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

    Prime Minister Najib Razak defeated, as Mahathir Mohamad party claims victory in Malaysia

    இதில், மகதீர் முகமதுவின் எதிர்க்கட்சி கூட்டணி 115 இடங்களை வென்றுள்ளதாக அந்நாட்டின் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மலேசியாவில் ஆட்சியமைக்க குறைந்தது 112 இடங்கள் தேவை. இன்றே பிரதமரின் பதவியேற்பு நடக்கும் என்று மகதீர் முகமது நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    உலகில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் மட்டத்திலான தலைவர்களில் மிக வயது மூத்தவர் என்ற பெருமையை மகதீர் முகமது பெற்றுள்ளார்.

    தற்போதைய பிரதமர் நஜீப் ரஸாக் மீது ஊழல், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஜிஎஸ்டி வரி விதிப்பை முறைப்படுத்தாமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. இதனால் இவருக்கு தேர்தலில் வெற்றி வாய்ப்பு குறைவாகவே இருப்பதாக கருத்துக்கணிப்புகள் தெரிவித்திருந்தன. தேர்தல் முடிவுகளும் அதேபோல வந்துள்ளன.

    கடந்த 1957ம் ஆண்டு சுதந்திரம் அடைந்ததில் இருந்து ஒரே கட்சி ஆட்சிதான் அங்கு நடந்து வந்தது. மகதீர் முகமதுவும் 1981 முதல் 2003 வரை, 22 வருட காலம் பிரதமராக ஆட்சி செய்து பின்னர் ஓய்வு பெற்றவர்தான். ஆனால் நஜீப் ரஸாக் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து, கோபத்தின் காரணமாக, எதிர்க்கட்சிகளின் கூட்டணியோடு மீண்டும் களம் கண்டார் மகதீர் முகமது.

    மலேசியா வரலாற்றில் சுமார் 60 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே கட்சி ஆட்சி வீழ்த்தப்பட்டு எதிர்க்கட்சியினர் ஆட்சியை கைப்பற்றி சாதனை படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Mahathir Mohamad will become the world's oldest elected leader, after a shock victory in Malaysia's election.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X