For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாளை உலக பொருளாதார மன்ற கூட்டம் தொடங்குகிறது.. பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார்

Google Oneindia Tamil News

பெர்ன்: சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் உலக பொருளாதார மன்றத்தின் கூட்டத்தில் காணொளி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி பேச உள்ளார்.

ஜெனிவாவை தலைமையிடமாகக் கொண்டு உலக பொருளாதார மன்றம் எனப்படும் வேர்ல்டு எக்கனாமிக் பாரம் எனும் அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு 1971ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த க்லெளஸ் ஸ்வாப் எனும் பொருளாதார பேராசிரியரால் நிறுவப்பட்டது.

உ.பி. தேர்தல்: தேதி அறிவிச்சு 48 மணி நேரம்தான் ஆச்சு.. பாஜகவுக்கு அதிர்ச்சி கொடுத்த 6 எம்எல்ஏக்கள்! உ.பி. தேர்தல்: தேதி அறிவிச்சு 48 மணி நேரம்தான் ஆச்சு.. பாஜகவுக்கு அதிர்ச்சி கொடுத்த 6 எம்எல்ஏக்கள்!

உலகின் முக்கியம்வாய்ந்த அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், சிந்தனையாளர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் பங்குபெறும் இந்த அமைப்பின் கூட்டத்தில் சுற்றுபுறசூழல், மக்கள் சுகாதாரம் மற்றும் ஏனைய உலக பிரச்சனைகளை பற்றி கலந்துரையாடல் நடத்தப்படும்.

 WEF மாநாடு

WEF மாநாடு

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகள், தனியார் அமைப்புகள், சிஇஓக்கள் உறுப்பினராக உள்ள இந்த அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் டாவோசில் வருடாந்திர கூட்டத்தை கடந்த 50 ஆண்டுகளாக நடத்தி வருகிறது. கொரோனா தொற்று காரணமாக 2021ஆம் ஆண்டு இந்த அமைப்பின் கூட்டம் நடைபெறாத நிலையில் இந்த அமைப்பின் இந்த ஆண்டுக்கான டாவோஸ் உச்சிமாநாடு ஆன்லைனில் நடைபெறுகிறது.

 2022ஆம் ஆண்டு கூட்டம்

2022ஆம் ஆண்டு கூட்டம்

உலகின் முக்கிய தலைவர்கள் உலகின் நிலை என்ற கருப்பொருளில் 2022 ஆம் ஆண்டுக்கான தங்கள் பார்வைகளை பகிர்ந்து கொள்ளும் நிகழ்ச்சி நிரல் இருக்கும் என கூறப்பட்டுள்ள நிலையில் பல நாடுகளில் முக்கிய தலைவர்கள் முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் பொருளாதாரத்தில் எதிர்கொள்ள உள்ள சவால்கள் மற்றும் அவற்றை எவ்வாறு எதிர் கொள்வது என்பது குறித்து காணொளிக்காட்சி முறையில் இந்தக் கூட்டத்தில் உரையாற்ற உள்ளனர்.

 பிரதமர் மோடி உரை

பிரதமர் மோடி உரை

ஜனவரி 17 ஆம் தேதியான திங்கட்கிழமை சீன அதிபர் ஜின்பிங் சிறப்பு உரையுடன் ஒரு வார கால டிஜிட்டல் உச்சிமாநாடு தொடங்க உள்ள நிலையில் திங்கட்கிழமை மாலை பிரதமர் நரேந்திர மோடி சிறப்புரை ஆற்றுகிறார். அதை தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அண்டனியோ குட்டரேஸ் உரை நிகழ்த்துவார்.

 உலக தலைவர்கள் பங்கேற்பு

உலக தலைவர்கள் பங்கேற்பு

இஸ்ரேலிய பிரதமர் நஃப்தலி பென்னட் மற்றும் ஜப்பான் பிரதமர் கிஷிடா ஃபுமியோ ஆகியோர் செவ்வாயன்று தங்களின் சிறப்பு உரைகளை வழங்க உள்ளனர். மேலும் WHO தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தலைவர் ஆதார் பூனாவல்லா , ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் , ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் , இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோ, ,ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் ,நைஜீரியாவின் துணை ஜனாதிபதி யெமி ஒசின்பாஜோ, அமெரிக்க கருவூல செயலாளர் ஜேனட் எல் யெலன், IMF நிர்வாக இயக்குனர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவர் கிறிஸ்டின் லகார்ட் ஆகியோரும் கூட்டத்தில் உரையாற்றவுள்ளனர்.

English summary
Prime Minister Narendra Modi will address a meeting of the World Economic Forum in Davos, Switzerland via video conference.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X