For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஹிட்லருடன் ரஷ்ய அதிபர் புதினை ஒப்பிட்டு பேச்சு... சர்ச்சையில் சிக்கினார் இளவரசர் சார்லஸ்

Google Oneindia Tamil News

லண்டன்: இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், சமீபத்திய நடவடிக்கைகள் குறித்து பேசும் போது ஹிட்லருடன் ரஷ்ய அதிபர் புதினை ஒப்பிட்டுப் பேசியதால் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் தனது மனைவி கமீலாவுடன் கனடா நாட்டிற்கு நான்கு நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இதன் ஒரு பகுதியாக கனடா நாட்டின் ஹேலிபேக்ஸ் நகரில் உள்ள மியூசியம் ஒன்றுக்கு சென்றிருந்தார் சார்லஸ்.

Prince Charles compares Putin to Hitler: Report

அப்போது அந்த மியூசியத்திற்கு வந்திருந்த மேரியென் பெர்குசன் (78) என்ற பெண்மணி, தனது வாழ்க்கையின் துயரப் பக்கங்களை இளவரசருடன் பகிர்ந்து கொண்டார். அதாவது, அவர் தனது 13-ஆவது வயதில் ஜெர்மனியின் ஹிட்லர் தலைமையிலான நாஜி படைகளிடம் இருந்து தப்பிப்பதற்காக குடும்பத்துடன் கனடா நாட்டிற்கு இடம் பெயர்ந்தவர்.

ஹிட்லரின் கொடுமையால் தனது குடும்ப உறுப்பினர்கள் வழிதவறி போய் விட்டதாக சார்லசிடம் தெரிவித்துள்ளார் மேரியென்.

இதனை அமைதியாகக் கேட்ட சார்லஸ், ஹிட்லரின் செய்கைகளோடு சமீபத்திய நடவடிக்கைகளை ஒப்பிட்டு பேசியுள்ளார். அப்போது ரஷிய அதிபர் விளாடிமிர் புதினும் உக்ரைன் விசயத்தில் அடால்ப் ஹிட்லர் போல் செயல்படுகிறார் எனத் தெரிவித்துள்ளார் சார்லஸ்.

சார்லஸ் இவ்வாறு கூறியதை அங்கு சுற்றி இருந்தவர்கள் கேட்டு அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக மேரியென் கூறும் போது, ‘அவர் இந்த கருத்தை கூறியதும் நான் ஆச்சரியமடைந்து விட்டேன். அரச பரம்பரையை சேர்ந்த அவர்கள் இதுபோன்று கூறமாட்டார்கள் என எனக்கு தெரியும். ஆனால், இது மனப்பூர்வமான மற்றும் நேர்மையான ஒன்றாக இருந்தது' என்றார்.

இவ்வாறு சர்ச்சைக்குரிய கருத்தை சார்லஸ் கூறியது குறித்து இதுவரை இங்கிலாந்து அரண்மனை தரப்பில் இருந்து தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Prince Charles, the heir to the British throne, has likened Russian President Vladimir Putin to German Nazi leader Adolf Hitler over his stance on Ukraine, according to a British newspaper.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X