For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"அம்மாச்சி"யுடன் ஜாலியாகப் பொழுதைக் கழித்த "சின்ன ராஜா" ஜார்ஜ்

Google Oneindia Tamil News

லண்டன்: இளவரசர் வில்லியமின் மகன் ஜார்ஜ், தனது அம்மா வழி பாட்டியுடன், அதாவது அம்மாச்சியுடன் ஜாலியாக பொழுதைக் கழிப்பது போன்ற படம் வெளியாகியுள்ளது.

ஒரு வயதாகும் ஜார்ஜ், வில்லியம் - கேட் மிடில்டன் தம்பதியின் முதல் பிள்ளை. ஜூலை 22ம் தேதி இந்த சின்ன ராஜாவுக்கு 2வது பிறந்த நாள் வருகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் தனது பாட்டி அதாவது கேட் மிடில்டனின் தாயார் கரோல் மிடில்டனுடன் பக்கிள்பர்ரி பார்ம் பார்க்குக்குப் போயிருந்தார் ஜார்ஜ். அங்கு தனது பாட்டியுடன் சேர்ந்து ஜாலியாக விளையாடிப் பொழுதைக் கழித்தார்.

பின்னர் தனது பாட்டியின் தோள் மீது அமர்ந்தபடி காருக்குத் திரும்பினார். அந்த பார்க்கில் தனது பாட்டியுடன் சேர்ந்து செம ஜாலியாக ஆட்டம் போட்டாராம் ஜார்ஜ். ஜார்ஜின் 2வது பிறந்த நாளுக்காக ராஜ குடும்பத்தினர் தயாராகி வருகின்றனராம்.

ஜார்ஜ் அடிக்கடி தனது பெற்றோர், தாத்தா பாட்டியுடன் பொது இடங்களுக்கு வந்து செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த வாரம் பக்கிங்காம் அரண்மனையின் பிரபலமான பால்கனி வழியாக பொதுமக்களுக்கு தரிசனம் கொடுத்தார் ஜார்ஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Prince George really loves the petting zoo! The 1-year-old royal spent a sweet afternoon at Bucklebury Farm Park in Berkshire, England, with his grandmother Carole Middleton last week.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X