For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அம்மா டயானாவின் பெயருக்கு உயிர் கொடுத்த இளவரசர் வில்லியம்

By Siva
Google Oneindia Tamil News

லண்டன்: மகளுக்கு தனது தாயின் பெயரை வைத்து டயானாவின் பெயரை வாழ வைத்துள்ளார் இங்கிலாந்து இளவரசர் வில்லியம்.

இங்கிலாந்து இளவரசர் வில்லியமும், அவரது தம்பி ஹாரியும் சிறுவர்களாக இருக்கும்போதே அவர்களின் தாய் டயானா கார் விபத்தில் பலியாகிவிட்டார். அவர் கார் விபத்தில் இறக்கவில்லை, ராஜ குடும்பத்தினர் தான் திட்டமிட்டு கொன்றதாக பல காலமாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இளவரசர் வில்லியம் செய்த செயல் டயானாவின் பெயரை நிலைத்து நிற்க வைத்துள்ளது.

குட்டி இளவரசி

குட்டி இளவரசி

வில்லியம் கடந்த சனிக்கிழமை பிறந்த தனது மகளுக்கு தனது தாய் டயானாவின் பெயரையும் சேர்த்து சார்லட் எலிசபெத் டயானா என்று பெயர் வைத்துள்ளார். தாயின் பெயரோடு சேர்த்து பாட்டி எலிசபெத்தின் பெயரையும் மகளுக்கு சூட்டியுள்ளார்.

டயானா

டயானா

இங்கிலாந்து ராஜ குடும்ப வரலாற்றில் இருந்து டயானாவின் பெயரை அழிக்க முயற்சி நடந்து வருகையில் வில்லியம் தனது மகளுக்கு டயானாவின் பெயரை சூட்டி தனது தாயின் பெயரை வரலாற்றில் இருந்து யாராலும் நீக்க முடியாது என்பதை நிரூபித்துவிட்டார்.

மோதிரம்

மோதிரம்

முன்னதாக வில்லியம் தனக்கு நிச்சயதார்த்தம் நடந்தபோது தாய் டயானாவின் மோதிரத்தை கேட் மிடில்டனுக்கு அணிவித்தார். அந்த மோதிரத்தை கேட் இன்றும் தினமும் அணிந்து வருகிறார்.

குட்டி டயானா

குட்டி டயானா

வில்லியமின் இந்த செயல்கள் டயானாவின் பெயரை களங்கப்படுத்தி வருவோருக்கு ஒரு அடியாக இருக்கும். குட்டி டயானா தனது பாட்டி போன்று குணாதியசங்களுடன் இருப்பாரா என்று வியக்கிறார்கள் இங்கிலாந்து மக்கள்.

எளிது அல்ல

எளிது அல்ல

டயானாவின் பெயரை வரலாற்றில் இருந்து நீக்க முயல்கையில் அவரது பெயரை குட்டி இளவரசிக்கு வைத்துள்ளது எளிது அல்ல. இருப்பினும் தனது தாயின் பெயர் நிலைத்து நிற்க எந்த ஒரு ரிஸ்க்கையும் எடுப்பேன் என்பதை இளவரசர் வில்லியம் நிரூபித்துள்ளார்.

English summary
Prince William has sent a clear message to the royal family that his mother Diana's name cannot be erased from the royal history.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X