For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஸ்பெயினின் வருங்கால அரசி இந்த சிறுமிதான்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த மன்னர்!

ஸ்பெயினின் இளவரசியாக மன்னர் ஆறாம் ஃபிலிப்பின் 12 வயது மகள் அறிவிக்கப்பட்டுள்ளார்.

Google Oneindia Tamil News

மாட்ரிட்: ஸ்பெயினின் இளவரசியாக மன்னர் ஆறாம் ஃபிலிப்பின் 12 வயது மகள் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர்தான் ஸ்பெயினின் வருங்கால அரசியாவார்.

ஸ்பெயினின் மன்னராக ஆறாம் ஃபிலிப் உள்ளார். இவரது 12 வயது மகள் லியோனார்.

இந்நிலையில் ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் மன்னர் குடும்பத்தின் விருது வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இளவரசியாக அறிவிப்பு

இளவரசியாக அறிவிப்பு

மாட்ரிட் நகரில் உள்ள ராயல் பேலஸில் நடந்த இந்நிகழ்ச்சியில் மன்னர் ஆறாம் ஃபிலிப் தனது மகள் லியோனாரை இளவரசியாக அறிவித்துள்ளார்.

ஆட்சி செய்யும் ராணியாக..

ஆட்சி செய்யும் ராணியாக..

இளவரசியாக அறிவிக்கப்படுவது அரச குடும்பத்தில் மிகப்பெரிய கவுரவமாகும். இளவரசியாக அறிவிக்கப்பட்ட இந்த 12 வயது சிறுமி லியோனார் வரும் காலத்தில் நாட்டையே ஆட்சி செய்யும் ராணியாக செயல்படுவார்.

கோல்டன் ஃபிளீஸ் விருது

கோல்டன் ஃபிளீஸ் விருது

இளவரசியாக அறிவிக்கப்பட்ட தனது மகளுக்கு கோல்டன் ஃபிளீஸ் விருதையும் மன்னர் ஆறாம் ஃபிலிப் வழங்கினார். இந்த கோல்டன் ஃபிளீஸ் விருது ஸ்பெயினின் மிக உயர்ந்த கவுரவமாகும்.

அரசிக்கான முதல்படி

அரசிக்கான முதல்படி

இனி சிறுமி லீயோனார் ஸ்பெயின் சிம்மாசனத்திற்குட்பட்டவர் ஆவார். இளவரசியாக அறிவிக்கப்பட்டதன் மூலம் லியோனார் ராணி ஆவதற்கான முதல் படியை எட்டியுள்ளார்.

வருங்கால ராணிக்கு வாழ்த்து

வருங்கால ராணிக்கு வாழ்த்து

நாட்டின் இளவரசியாக அறிவிக்கப்பட்டுள்ள லியோனார்க்கு அரச குடும்பத்தினர் வாழ்த்து தெரிவித்தனர். அந்நாட்டு மக்களும் தங்களின் வருங்கால ராணிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அரசியாகும் வரிசையில் முதலிடம்

அரசியாகும் வரிசையில் முதலிடம்

இதன்மூலம் ஸ்பெயினின் அரசியாகும் வரிசையில் இளவரசி லியோனார் முதலிடத்தில் உள்ளார். அண்மையில் வரி ஏய்ப்பு புகாரில் சிக்கிய மன்னர் ஆறாம் ஃபிலிப்பின் சகோதரியான இளவரசி கிறிஸ்டினாவின் இளவரசி பட்டம் பறிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

English summary
Princess Leonor recieves a big honor from her father, King Felipe VI, in an award ceremony held at the Royal Palace at madrid. The 12-year-old royal, who will one day rule the country receives Order of the Golden Fleece from the king Felipe VI.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X