For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒரு கைதியின் டைரிக் குறிப்பு.. தான் அடைக்கப்பட்ட சிறை அறைக்கு மார்க் போட்டு அசத்தல்!

Google Oneindia Tamil News

லண்டன்: இங்கிலாந்தைச் சேர்ந்த கைதி ஒருவர் தான் அடைக்கப்பட்டிருந்த சிறை அறைக்கு மார்க் போட்டு காவல்துறையை அலற வைத்துள்ளார்.

இந்த மார்க் விவகாரத்தை இங்கிலாந்தின் பிர்மிங்காம் காவல்துறை தனது பேஸ்புக் பக்கத்தில் போட்டுள்ளது. இத்தனைக்கும் அந்த நபர் ஒரே ஒரு நாள் மட்டும்தான் சிறையில் இருந்துள்ளார். ஆனால் டிரிப அட்வைசர் ஸ்டைலில் அவர் அந்த அறை குறித்து விவரித்து மார்க் போட்டுள்ளார்.

60 அறைகள் கொண்ட அந்த சிறைக்கு ஜூன் 29ம் தேதி இரவு அந்த நபர் அழைத்து வரப்பட்டார். சொத்துத் தகராறில் கைது செய்யப்பட்டவர் அவர். அவரை ஒரு அறையில் அடைத்தனர். எர்டிங்க்டன் நகரைச் சேர்ந்தவர், 24 வயது இளைஞர். அடுத்த நாள் அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.

16 மணி நேர சிறை

16 மணி நேர சிறை

16 மணி நேரம் தான் சிறையில் அடைபட்டிருந்ததை வைத்து ஒரு ஆய்வை வெளியிட்டு அதிர வைத்துள்ளார் அந்த இளைஞர். இதுகுறித்து அவர் சிறை நிர்வாகத்திடம் கொடுத்த அறி்கையில், எந்த அளவுக்கு சிறை சுத்தமாக, அழகாக இருந்தது என்பதை விவரித்துள்ளார். மேலும் சிறை ஊழியர்கள் சிறப்பாக பணியாற்றுவதாகவும் அவர் பாராட்டியுள்ளார்.

என்னா மரியாதை.. என்னா மரியாதை!

என்னா மரியாதை.. என்னா மரியாதை!

கைதிகளை மரியாதையாக நடத்துவதாக பாராட்டியுள்ளார். தனது சிறை அறையை சிறைக் காவலர் மிகுந்த பொறுப்போடும், மரியாதையோடும் காட்டி அங்கு அடைத்து விட்டுச் சென்றதாகவும் அவர் கூறியுள்ளார்.

நல்ல சுத்தம்

நல்ல சுத்தம்

தனது சிறை அறை சுத்தமாகவும், நல்ல அலங்காரத்துடனும் இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் உயர்ந்த தரத்துடன் கூடியதாக தனது அறை இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

டாய்லெட்டில் முடி பாஸ்!

டாய்லெட்டில் முடி பாஸ்!

அதேசமயம், டாய்லெட்டுக்குள் முடிகள் சிக்கிக் கிடந்ததாகவும், அது சற்று தன்னை முகம் சுளிக்க வைத்ததாகவும் கூறியுள்ள அவர் அதுகுறித்து சிறை நிர்வாகம் கவனம் செலுத்துமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

கரெக்டா டீ தர வேண்டாமா

கரெக்டா டீ தர வேண்டாமா

மேலும் சரியான நேரத்தில் டீ தரப்படுவதில்லை என்றும் அந்தப் பிரச்சினையை சரி செய்ய வேண்டும் என்றும் சிறை நிர்வாகததிற்கு அவர் கோரிக்கை வைத்துள்ளார். கடைசியாக இந்த கருத்துக்களை எழது தனக்கு பேப்பரும், பேனாவும் கொடுத்த சிறை ஊழியர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

5க்கு 3 மார்க்

5க்கு 3 மார்க்

எல்லாவற்றையும் முடித்த அவர் 5க்கு 3 ஸ்டார் போட்டு மதிப்பெண் கொடுத்துள்ளார். ஆனால் இந்த அறிக்கை குறித்து கருத்துத் தெரிவித்த தலைமை இன்ஸ்பெக்டர் பால் மைனர் கூறுகையில் நாங்கள் 5 ஸ்டார் சிறையா, இதைக் கருதுகிறோம். ஆனால் அவரோ 3 ஸ்டார்தான் போட்டுள்ளார் என்று சிரித்தபடி கூறினார்.

நம்மூர் சிறைக்கு வந்து போகும் கைதிகளும் இப்படி எழுதுவார்களா.. !

English summary
A British prisoner has reviewed his jail cell and the police has posted the same in its FB page.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X