For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஐபோன் 6 பிளஸ், ஃபிளைட் பயணம் – இதற்கெல்லாம் சொந்தக்காரர்கள் இந்த சீனத்துப் “பிச்சைக்காரர்கள்”

Google Oneindia Tamil News

பீஜிங்: சீனாவில் ஆய்வின்போது பிடிபட்ட பிச்சைக்காரர்கள் போலியானவர்கள் என்பதை அறிந்து போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சீனாவின் தென்மேற்குப் பகுதியில் உள்ள சோங்கிங் நகராட்சியில் உள்ளூர் மக்களை ஏமாற்றி பிச்சையெடுத்த நான்கு தொழில்முறை பிச்சைக்காரர்கள் போலீசில் பிடிபட்டனர்.

கிழிந்த ஆடை, சோகமான கதை, பிச்சைப் பாத்திரம் என்று சோகமாக நகரத்தெருக்களில் வலம் வரும் இவர்கள், நிஜத்தில், ஊர் விட்டு ஊர் விமானத்தில் சொகுசுப்பயணம் மேற்கொள்வது தெரிய வந்துள்ளது.

Professional beggars in China fly with iPhones pricey watches

அம்மாநில சிசிடிவி கேமரா காட்சிகளைப் பார்த்து சந்தேகமடைந்த நகராட்சி காவல்துறையினர் அங்கு பிச்சையெடுத்த சிலரிடம் விசாரணை நடத்தினர்.

முதலில் பணமில்லாமல் ஊர் ஊராக வேலைக்கு செல்வதாகவும், வீட்டுக்குக் கூட திரும்ப முடியாத அளவுக்கு வறுமையில் வாடுவதாகவும் சொன்ன அவர்கள் போலி பிச்சைக்காரர்கள் என்பதும், பிப்ரவரி 19இல் கொண்டாடப்பட இருக்கும் சீன புத்தாண்டு விழாவைக் கொண்டாட பணம் சேர்ப்பதும் முதல் கட்ட விசாரணையின் முடிவில் தெரிய வந்தது.

இதுவரை ஒவ்வொருவரும் 800 யுவான் அதாவது இந்திய மதிப்பில் 8 ஆயிரம் ரூபாய் பணம் சேர்த்திருப்பதும், பிடிபட்ட ஒருவரிடம் ஐ போன் 6 ப்ளஸ் எனும் அதிநவீன செல்போன் இருந்ததும் காவல் துறையினரை அதிர்ச்சியடையச் செய்தது.

சீனாவில் பிச்சைக்காரர்கள் மீது பொதுமக்களுக்கு சந்தேகம் அதிகரித்துள்ளது என்பது சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களிடம் மேற்கொண்ட கருத்துக் கணிப்பில், பிச்சை எடுப்பவர்கள் போலியானவர்கள் என்று 82.3 சதவீதம் பேர் பதிலளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Fake beggars in China were having a gala time with some of them flying around city to city with pricey watches and latest iPhones only to beg around in ragged clothes, a tragic story and a begging bowl.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X