For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அதிரவைக்கும் புராஜக்ட் மேவன்.. அமெரிக்க ராணுவத்திற்கு உதவும் கூகுள்.. விலகும் பணியாளர்கள்!

அமெரிக்க ராணுவத்திற்கு தொழில்நுட்ப உதவி செய்ய கூகுள் முடிவெடுத்து இருப்பது டெக் உலகில் பெரிய பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    அமெரிக்க ராணுவத்திற்கு உதவும் கூகுள்.. விலகும் பணியாளர்கள்!

    நியூயார்க்: அமெரிக்க ராணுவத்திற்கு தொழில்நுட்ப உதவி செய்ய கூகுள் முடிவெடுத்து இருப்பது டெக் உலகில் பெரிய பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது.

    அமெரிக்க ராணுவ தலைமையிடமாக பென்டகனுடன் கூகுள் ஒரு முக்கியமான ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி கூகுளிடம் இருக்கும் சில முக்கியமான தொழில்நுட்பங்களை அமெரிக்க ராணுவத்துடன் பகிர்ந்து கொள்ள திட்டமிட்டுள்ளது.

    இது பெரிய பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது . கூகுள் நிறுவனத்திற்கு உள்ளாகவே இது பெரிய குழப்பத்தை உருவாக்கி உள்ளது.

    புராஜக்ட் மேவன் என்றால் என்ன

    புராஜக்ட் மேவன் என்றால் என்ன

    அமெரிக்க ராணுவத்திற்கு உதவும் கூகுளில் இந்த திட்டத்திற்கு புராஜக்ட் மேவன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் என்ன செய்ய இருக்கிறார்கள் என்பதை கூகுள் மக்களுக்கு தெளிவாக தெரிவிக்கவில்லை . பென்டகனின் மிகவும் ரகசியமான திட்டங்களில் இதுவும் ஒன்றாக உள்ளது. கூகுள் அவர்களிடம் இருக்கும் மிக உயிரிய தொழில்நுட்பங்களை அமெரிக்க ராணுவத்திடம் அளிக்க உள்ளது.

    ஏஐ

    ஏஐ

    செயற்கை நுண்ணறிவு திறன் எனப்படும் ஆர்டிபிஷியல் இண்டலிஜன்ஸ் தொழில்நுட்பம் கூகுளிடம் மிகவும் சிறப்பாக செய்யப்படுகிறது. இதை அமெரிக்க ராணுவம் தங்கள் ஏவுகணையிலும் ராணுவ திட்டங்களிலும் பயன்படுத்த உள்ளது. இதற்காக கூகுளை நாடியுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அமெரிக்க ராணுவம், இந்த தொழில்நுட்பம் மூலம் இயங்க கூடிய ரோபோட்களை உருவாக்க முயற்சி எடுத்து வருகிறது.

    புயலை கிளப்பும் பிரச்சனை

    புயலை கிளப்பும் பிரச்சனை

    இந்த விஷயம் யாரும் எதிர்பார்க்காத ஒன்றை உருவாக்க வாய்ப்புள்ளது. சரியாக சொல்ல வேண்டும் என்றால், கூகுளிடம் உலகில் இருக்கும் பல கோடி மக்களின் தகவல்கள் இருக்கிறது. நம்முடைய தெரு எப்படி இருக்கும் என்று நம்மைவிட கூகுளிற்குத்தான் நன்றாக தெரியும். இதனால் இதை வைத்து அமெரிக்க ராணுவம் என்ன மாதிரியான வேலைகளை வேண்டுமானாலும் செய்யலாம். இதனால் புராஜக்ட் மேவன் பெரிய பீதியை உருவாக்கியுள்ளது.

    பணியிலிருந்து விலகல்

    பணியிலிருந்து விலகல்

    புராஜக்ட் மேவனுக்கு கூகுள் பணியாளர்கள் சிலரே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சில முக்கிய மூளைகள் இதனால் பணியைவிட்டு சென்றுள்ளனர். ஆனால் கூகுள் கண்டிப்பாக, இந்த செயல் திட்டத்தை தொடரும் நினைப்பில் உள்ளது. இதுவரை 11 பேர் கூகுளில் இருந்து இதை காரணம் காட்டி பணியை விட்டு விலகியுள்ளனர்.

    English summary
    Project Maven: Google will give its technology to American Army. This news creates a huge storm in Tech field.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X