For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மன நலம் பாதித்தவர்களிடம் நாட்டைக் கொடுக்கலாம்.. பரிந்துரைத்த இங்கிலாந்து அதிகாரி

Google Oneindia Tamil News

லண்டன்: அணு ஆயுதத் தாக்குதல் சம்பவம் நடக்க நேரிட்டால், அந்த சமயத்தில் நாட்டின் நிர்வாகத்தை மன நலம் பாதித்தவர்களிடம் தரலாம் என்று இங்கிலாந்து உள்துறை அமைச்சகத்தைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் பரிந்துரைத்த விவரம் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்து அரசின் ரகசிய ஆவணம் ஒன்று குறித்த விவரத்தை தற்போது வெளியில் விட்டுள்ளனர். அதில்தான் இந்த பரிந்துரையை ஜேன் ஹாக் என்ற உள்துறை அமைச்சக அறிவியல் அதிகாரி கூறியுள்ளார்.

1982ம் ஆண்டு ஹாக் இந்த யோசனையைத் தெரிவித்துள்ளார். ஆனால் இந்தப் பரிந்துரையை உள்துறை ஏற்கவில்லை.

Exercise Regenerate,

Exercise Regenerate,

Exercise Regenerate என்ற பெயரிலான அந்த ஆவணமானது 1982ம் ஆண்டு உருவாக்கப்பட்டதாகும். அதில் இங்கிலாந்து மீது ராணுவத் தாக்குதல் குறிப்பாக அணு ஆயுதத் தாக்குதல் ஏற்பட்டால் நாட்டின் நிர்வாகத்தை மன நலம் பாதித்த ஒருவரிடம் ஒப்படைக்கலாம் என்று பரிந்துரைத்துள்ளார் ஹாக்.

புத்திசாலித்தமானவர்கள் - அஞ்சாதவர்கள்

புத்திசாலித்தமானவர்கள் - அஞ்சாதவர்கள்

இதற்கான காரணத்தையும் அவர் விரிவாக தெரிவித்துள்ளார். மனநலம் பாதித்தவர்கள் பெரும்பாலும் புத்திசாலித்தனமாகவும், உறுதியாகவும், யாருக்கும் அஞ்சாதவர்களாகவும், பாரபட்சம் பார்க்காதவர்களாகவும் இருப்பார்கள்.

நெருக்கடியை சமாளிக்கும் திறன் இருக்கும்

நெருக்கடியை சமாளிக்கும் திறன் இருக்கும்

மேலும் இப்படிப்பட்டவர்கள் எப்போதும் புத்தி கூர்மையுடன் சீரிய முறையில் சிந்திப்பார்கள். தாங்கள் நினைத்ததை செய்யாமல் விட மாட்டார்கள். அதற்காக எந்தத் தடை வந்தாலும் அதைத் தாண்டத் தயங்க மாட்டர்கள். நெருக்கடியை சமாளிக்கக் கூடிய வகையில் திடமானவர்களாகவும் இருப்பார்கள்.

ஒரு சதவீதம் பேர் மன நல பாதிப்புக்குள்ளானவர்கள்தான்

ஒரு சதவீதம் பேர் மன நல பாதிப்புக்குள்ளானவர்கள்தான்

இங்கிலாந்து மக்கள் தொகையில் ஒரு சதவீதம் பேர் இப்படிப்பட்டவர்கள்தான். எனவே இவர்களை அதுபோன்ற நெருக்கடியான சமயத்தில் சரியாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

காப்பாற்ற முயல்வார்கள்

காப்பாற்ற முயல்வார்கள்

மன நலம் பாதித்தவர்கள் மற்றவர்களுக்கு கஷ்டம் தர மாட்டார்கள். மாறாக அவர்களைக் காப்பாற்றவே முயல்வார்கள். அவர்களுக்காக பரிவு காட்டுவார்கள்.

பீலிங்ஸ் இருக்காது

பீலிங்ஸ் இருக்காது

யாருக்காகவும் அவர்கள் தங்களது உணர்வுகளைக் காட்ட மாட்டார்கள். அவர்களுக்கென்று கட்டுப்பாடும் கிடையாது. எனவே நடுநிலையாக இருப்பார்கள்.

நிறுவனங்களிலும் நியமிக்கலாம்

நிறுவனங்களிலும் நியமிக்கலாம்

நாட்டின் தலைமைப் பொறுப்பு மட்டுமல்லாது அனைத்து நிறுவனங்களிலும் கூட இதுபோன்றவர்களை நியமிக்க சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் முன்வரலாம் என்று கூறியுள்ளார் ஹாக்.

ஆறு மாதத் திட்டம்

ஆறு மாதத் திட்டம்

மேலும் இந்த ஆவணத்தில், அணு ஆயுதப் போர் வெடித்த பின்னர் அடுத்த ஆறு மாதங்களில் என்னவெல்லாம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். என்ன மாதிரியான சூழல் நிலவும் என்பது குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Recently-released documents have revealed that a Government official suggested putting psychopaths in charge of the country in the aftermath of a nuclear attack.The National Archives has unveiled Exercise Regenerate, a 1982 Home Office plan to keep maintain order in Britain following the nightmarish scenario. Jane Hogg, a scientific officer in the Home Office who worked on the operation, advocated that a psychopath's logic, intelligence, ability to cope in a crisis and lack of morals would make them ideal leaders in the chaos that would ensue after the bomb.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X