For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரிட்டனை தொடர்ந்து.. ஸ்புட்னிக்-5 தடுப்பு மருந்தை பொதுமக்களுக்கு கொடுக்க ரஷ்யா அதிரடி உத்தரவு

Google Oneindia Tamil News

மாஸ்கோ: ரஷ்யாவின் ஸ்புட்னிக் 5 தடுப்பு மருந்தை அடுத்த வாரம் பொதுமக்களுக்கு கொடுக்குமாறு அதிபர் விளாதிமிர் புதின் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக பிபிசர்- பயோன்டெக் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியை அடுத்த வாரம் முதல் பொதுமக்களுக்கு போட பிரிட்டன் ஒப்புதல் வழங்கியுள்ளது.

உலகில் கொரோனா பாதித்த நாடுகளில் 4-வது இடத்தில் உள்ளது ரஷ்யா. இங்கு கொரோனாவால் 23 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதுவரை 41 ஆயிரம் பேர் உயிரிழந்துவிட்டார்கள்.

Putin orders to start mass vaccine Sputnik V

இங்கு தினமும் 589 பேர் கொரோனாவால் இறக்கிறார்கள். இந்த நிலையில் ரஷ்யாவில் கொரோனாவுக்கான ஸ்புட்னிக் 5 என்ற தடுப்பு மருந்து தயார் செய்யப்பட்டுள்ளது. இதன் சோதனை ஓட்டங்கள் முடிந்தன.

இந்த நிலையில் அடுத்த வாரம் முதல் கொரோனா தடுப்பு மருந்து ஸ்புட்னிக்- 5 ஐ பொதுமக்களுக்கு கொடுக்க அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து புதின் கூறுகையில் கொரோனாவால் தினமும் ரஷ்யாவில் 500 பேர் உயிரிழக்கிறார்கள்.

எனவே அடுத்த வாரம் முதல் கொரோனா தடுப்பு மருந்தை பொதுமக்களுக்கு கொடுக்கவுள்ளோம். இதற்காக அடுத்த சில நாட்களில் 2 மில்லியன் தடுப்பு மருந்துகளை தயார் செய்யவுள்ளோம். ஸ்பூட்னிக் 5 தடுப்பு மருந்து கொரோனாவுக்கு எதிராக 92 சதவீதம் செயல்திறன் உள்ளது.

சென்னையில் தலைகீழாக மாறிய நிலை.. நாளுக்கு நாள் குறையும் கொரோனா பாதிப்புசென்னையில் தலைகீழாக மாறிய நிலை.. நாளுக்கு நாள் குறையும் கொரோனா பாதிப்பு

டிசம்பர் மாதம் முதல் யாரெல்லாம் கொரோனா தடுப்பு மருந்தை போட்டுக் கொள்ள முன் வருகிறார்களோ அவர்களுக்கு முன்னுரிமை அளித்து செலுத்தப்படும் என்றார் புதின். ஸ்புட்னிக் 5 தடுப்பு மருந்தை தயார் செய்யும் கிரெம்லின் நிறுவனம் முதலில் ரஷ்யர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். என்றும் மற்ற நாடுகளுக்கும் விநியோகம் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

இதனிடையே பிபிசர்- பயோன்டெக் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியை அடுத்த வாரம் முதல் பொதுமக்களுக்கு போட பிரிட்டன் ஒப்புதல் வழங்கியுள்ளது. பொதுமக்களுக்கு தடுப்பு மருந்தை செலுத்த முதலில் அனுமதி வழங்கிய நாடு பிரிட்டன் ஆகும். இதற்கு அடுத்த ரஷ்யாவும் தற்போது பொதுமக்களுக்கு தடுப்பு மருந்தை செலுத்தவுள்ளது.

English summary
Vladmir Putin orders to start mass vaccine Sputnik V of Covid 19 by next week.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X