For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்தியா, சீனா இல்லாததை கற்பனை கூட செய்ய முடியவில்லை.. ரஷ்யா அதிபர் புடின்.. உடனே மோடி செம்ம பதில்

Google Oneindia Tamil News

Recommended Video

    Watch Video : Russia opens the gate of the new sea route to Chennai

    மாஸ்கோ: ஜி7 அல்லது ஜி8 நாடுகள் கூட்டத்தை நடத்த ரஷ்யா தயாராக இருப்பதாகவும் இந்த சர்வதேச கூட்டமைப்புகளில் இந்தியா, சீனா மற்றும் துருக்கியை சேர்ப்பதை வரவேற்பதாகவும் அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்தார்.

    ரஷ்யாவின் வ்ளாடிவோஸ்தக் நகரில் 5வது கிழக்கு பொருளாதார மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக இந்திய பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.

    Putin said; i could not imagine G7/G8 an international organization without China or India

    இந்த கூட்டத்தில் ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புடின் கலந்து கொண்டு பேசுகையில், ஜி7 அல்லது ஜி 8 போன்ற சர்வதேச நாடுகளின் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டத்தை கூட்ட ரஷ்யா தயாராக உள்ளது. இதில் இந்தியா, துருக்கி மற்றும் சீனாவையும் சேர்க்க வேண்டும்.

    இந்தியாவும் சீனாவும் இல்லாத சர்வதேச நாடுகளின் கூட்டமைப்பை கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை என்றார். அப்போது கூட்டத்தில் பங்கேற்று இருந்த பிரதமர் மோடி உடனே பதில் அளித்தார். அப்போது பிரதமர் மோடி பேசுகையில், இதுபோன்ற கேள்விகள் ஜி7 நாடுகளிடம்இருந்து வந்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். உங்களிடம் இருந்த வந்துள்ள இந்த கேள்விக்கு ஆம் அல்லது இல்லை என்று சொல்வதற்கு எந்த மதிப்பும இல்லை என கூறினார்.

    ஜி 8 நாடுகள் என்று இருந்த கூட்டமைப்பில் உறுப்பினராக இருந்த ரஷ்யா கடந்த 2014ம் ஆண்டு முதல் உறுப்பினராக இல்லை. இதனால் ஜி 7 நாடுகளாக மாறியுள்ளது. இந்த ஜி 7 நாடுகள் என்பது உலகின் தொழில் வர்த்க ரீதியாக பணக்கார நாடுகளாக அறியப்படும் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி மற்றும ஜப்பான் ஆகிய நாடுகள் உள்ளன.

    English summary
    Russia President Vladimir Putin said he could not imagine G7/G8 an international organisation without China or India.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X