For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சூப்பர்.. நேருக்கு நேர் மோதும் படி சென்ற பயணிகள் விமானம்.. செங்குத்தாக கீழே பறந்து எஸ்கேப்!

சிலநாட்களுக்கு முன்பு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து மெல்போர்ன் சென்ற விமானம் ஒன்று மிக மெல்லிய இடைவெளியில் பெரிய விபத்தில் இருந்து தப்பித்துள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    நேருக்கு நேர் மோதும் படி சென்ற பயணிகள் விமானம்-வீடியோ

    மெல்போர்ன்: சிலநாட்களுக்கு முன்பு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து மெல்போர்ன் சென்ற விமானம் ஒன்று மிக மெல்லிய இடைவெளியில் பெரிய விபத்தில் இருந்து தப்பித்துள்ளது. தற்போதுதான் அந்த விமான நிறுவனம் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

    குவான்டாஸ் 94 விமானம் இப்படி விபத்திற்கு உள்ளாக சென்று உள்ளது. அந்த விமானத்திற்கு எதிரே ஏ380 என்ற இன்னொரு ஆஸ்திரேலிய விமானம் எதிர் திசையில் வந்துள்ளது.

    இரண்டு விமானமும் மோதும் நிலைக்கு சென்றுள்ளது. கடைசி நேரத்தில் விமானிகள் வித்தியாசமான முடிவெடுத்து எல்லோரையும் காப்பாற்றி இருக்கிறார்கள்.

     இரண்டு விமானம் வந்தது

    இரண்டு விமானம் வந்தது

    மொத்தமாக இரண்டு விமானமும் எதிர் எதிரே மோதும் நிலையில் வந்துள்ளது. ஏர் டிராபிக் அதிகாரிகள் இதுகுறித்து கடைசி நேரத்தில் எச்சரித்து இருக்கிறார்கள். இதனால் விமானம் வேக வேகமாக கீழே இறங்கியது. குவான்டாஸ் 94 விமான உயரத்தை குறைப்பதன் மூலம் விபத்தை தடுக்க முடியும் என்பதால், அதை கீழே இறக்கி இருக்கிறார்கள்.

    இறங்கியது

    இறங்கியது

    இதனால் எதிரே வந்த விமானத்தை விட, குவான்டாஸ் 94 விமானம் 1000 அடி குறைவான தூரத்தில் பறக்கும் படி குறைக்கப்பட்டது. அதேபோல் கீழே 20 அடி தூரம் இரண்டுக்கும் இருக்கும்படி பார்த்துக் கொள்ளப்பட்டது. இதனால் இரண்டு விமானமும் பெரிய விபத்தில் இருந்து தப்பித்தது. ஆனால் அந்த விமானத்தின் காற்று காரணமாக இதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

    பிரச்சனை

    பிரச்சனை

    இதனால் குவான்டாஸ் 94 விமானம் நிலை தடுமாறியுள்ளது. இதனால் வேகமாக, குவான்டாஸ் 94 விமானம் செங்குத்தாக கீழே இறக்கப்பட்டுள்ளது. சுமார் 20 நொடிகள் வரை இப்படி விமானம் செங்குத்தாக பல பயணிகளை வைத்துக்கொண்டு தலைகீழாக இறங்கி உள்ளது. அதன்பின் விமானம் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியது.

    எந்த பாதிப்பும் இல்லை

    எந்த பாதிப்பும் இல்லை

    இந்த பிரச்சனை காரணமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. விமானிகள் மிகவும் சிறப்பாக செயல்பட்ட காரணத்தால் எந்த பிரச்சனையும் இல்லாமல் மீண்டும் விமானம் இயல்பு நிலைக்கு கொண்டு வரப்பட்டது. இதன் பின் விமானிக்கு வேறு பாதை அறிவுறுத்தப்பட்டு, மாற்றி விடப்பட்டார்.

    English summary
    Qantas Plane did a nosedive fpr 10 seconds to save passengers in Australia. It went close to hit an opposite flight.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X