For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குவாட்: பொது எதிரி சீனாவை கட்டுப்படுத்த இந்தியா உடன் கைகோர்த்த அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா

நான்கு நாடுகளுக்கும் பொதுவான எதிரியாக சீனா உருவெடுத்துள்ள நிலையில், இந்த பிராந்தியத்தில் அந்த நாட்டின் எழுச்சி குறித்து இந்த நாடுகள் நேற்றைய குவாட் குழு கூட்டத்தில் விரிவாக ஆய்வு செய்தன.

Google Oneindia Tamil News

டோக்கியோ: இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகளுக்கும் பொதுவான எதிரியாக உள்ள சீனாவின் வளர்ச்சி எழுச்சி பற்றி குவாட் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலக வரைபடத்தில் நாற்கர வடிவில் அமைந்திருக்கும் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகள் குவாட் அமைப்பை உருவாக்கி உள்ளன. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை சேர்ந்த இந்த நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் நேற்று ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றுள்ளது.

Quad: US, Japan, Australia join hands with India to control common enemy China

கொரோனா பரவல் அச்சுறுத்தலுக்கு மத்தியில் நடந்த இந்த கூட்டத்தில் இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்காவின் மைக் பாம்பியோ, ஜப்பானின் டோஷிமிட்சு மொடேகி, ஆஸ்திரேலியாவின் மரைஸ் பெய்ன் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த குவாட் குழுவின் அங்கத்தினராக விளங்கும் 4 நாடுகளின் பொதுவான அச்சுறுத்தலாக சீனா விளங்குகிறது. அந்தவகையில் லடாக் விவகாரத்தில் கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக இந்தியாவுடன் சீனா மோதி வருகிறது.

கொரோனா தொற்று, வர்த்தக பிரச்சினை, தொழில்நுட்பம், ஹாங்காங்-தைவான் விவகாரங்கள், மனித உரிமை என பல்வேறு பிரச்சினை தொடர்பாக அமெரிக்காவும், சீனாவும் மோதி வருகின்றன. இதைப்போல ஆஸ்திரேலியாவுக்கும், சீனாவுக்கும் இடையேயான உறவு சமீபத்திய மாதங்களாக பாதிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு சீனக்கடல் பகுதியில் ஜப்பான் நிர்வகித்து வரும் பல தீவுகளுக்கு சீனா உரிமை கொண்டாடுவது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் அந்த இரு நாடுகளும் மோதி வருகின்றன.

குவாட் அமைப்பில் உள்ள நான்கு நாடுகளுக்கும் பொதுவான எதிரியாக சீனா உருவெடுத்துள்ள நிலையில், இந்த பிராந்தியத்தில் அந்த நாட்டின் வளர்ச்சி குறித்து இந்த நாடுகள் நேற்றைய குவாட் குழு கூட்டத்தில் விரிவாக ஆய்வு செய்தன.

இந்த கூட்டத்தில் ஜப்பான் பிரதமர் யோஷிகைட் சுகாவும் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், கொரோனா தொற்றைப்போல ஏராளமான சவால்களை சர்வதேச சமூகம் எதிர்கொண்டு வருகிறது. இதனால்தான் பல நாடுகளுடன் முடிந்தவரை ஒருங்கிணைப்பை ஆழப்படுத்தி நமது பார்வையை பரவலாக்க வேண்டிய மிகச்சரியான நேரமாக இந்த காலகட்டம் உள்ளது என்றார்.

 இந்தியா-சீனா ராணுவ கமாண்டர்கள் இடையே அக்.12-ல் 7-வது கட்ட பேச்சுவார்த்தை இந்தியா-சீனா ராணுவ கமாண்டர்கள் இடையே அக்.12-ல் 7-வது கட்ட பேச்சுவார்த்தை

சீனாவின் வளர்ந்து வரும் உறுதிப்பாட்டை எதிர்க்கும் நமது தாராள மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் திட்டம், கொரோனா சவால்களுக்கு மத்தியில் முன்னெப்போதையும் விட முக்கியமானதாக இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.

Quad: US, Japan, Australia join hands with India to control common enemy China

இந்த பிராந்தியத்தின் அமைதி மற்றும் வளர்ச்சிக்கான பார்வையை கொண்டிருந்த ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபே, தாராள மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் திட்டத்தின் முக்கிய காரணகர்த்தாவாக இருந்ததாக கூறிய சுகா, அவரது திட்டங்களை தொடர்வேன் என்றும் உறுதியளித்தார்.

பின்னர் ஜப்பான் பிரதமர் இல்லாமல், அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் விரிவான ஆலோசனை கூட்டத்தை நடத்தினர்.

அந்தவகையில் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடன் அவர் நடத்திய சந்திப்பின்போது, பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகள், சீனாவின் எழுச்சிக்கு மத்தியில் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஒத்துழைப்பை பலப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். அத்துடன் இந்தியா எதிர்கொள்ளும் பாதுகாப்பு சவால்கள் குறித்தும் இருவரும் ஆலோசனை நடத்தியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதனிடையே ஜப்பான், இந்தியா, ஆஸ்திரேலியா நாட்டு வெளியுறவு அமைச்சர்களுடன் மைக் பாம்பியோ, தனித்தனியாக சந்தித்து பேசினார். இதைப்போல ஜப்பான் பிரதமர் யோஷிகைட் சுகாவையும் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார். ஜப்பானின் புதிய பிரதமராக சுகா கடந்த மாதம் பதவியேற்றிருக்கும் நிலையில், அவருடனான ஜெய்சங்கரின் முதலாவது சந்திப்பு இதுவாகும்.

இந்த சந்திப்பு குறித்து ஜெய்சங்கர் தனது டுவிட்டர் பக்கத்தில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பாம்பியோவுடனான சந்திப்பு மூலம் எனது டோக்கியோ பயணம் தொடங்கி இருக்கிறது. பல துறைகளில் நமது ஒத்துழைப்பு வளர்ந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மைக்காக இணைந்து உழைப்போம் என்று பதிவிட்டுள்ளார்.

English summary
It is reported that the Quad meeting discussed the rise of China, the common enemy of India, the United States, Japan and Australia.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X