For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜப்பானில் இன்று அதிகாலை நிலநடுக்கம் - ரிக்டரில் 6.1 ஆக பதிவு

ஜப்பானில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அலறி அடித்து சாலைகளுக்கு ஓடி வந்தனர்.

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

டோக்கியோ : ஜப்பான் தலைநகர் டோக்கியோ அருகே ஹோன்ஷூ தீவில் இன்று அதிகாலை நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளது.

டோக்கியோவின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ள ஹோன்ஷூ தீவில் இன்று அதிகாலை நிலநடுக்கம் உணரப்பட்டதால், கட்டிடங்கள் அதிர்ந்தன. இன்று காலை ஆறு மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

 A quake hit western Japan early on Monday

இதனால் வீடுகளில் தூங்கிக்கொண்டிருந்த மக்கள் அலறி அடித்து சாலைகளுக்கு ஓடி வந்தனர். இந்த நிலநடுக்கம் கடலில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் அடுத்தடுத்து ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளது. இதனால் ஏற்பட்ட நில அதிர்வால் பல இடங்களில் கட்டடங்கள், சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன. நூறுக்கும் மேற்பட்ட வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

எனினும், வருகிற நாட்களில் இந்த பகுதியில் கடுமையான சேதங்களை உருவாக்கும் நிலநடுக்கம் ஏற்படலாம் என ஜப்பான் வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

English summary
A quake hit western Japan early on Monday. three people with minor injuries and damaging buildings and roads The shallow tremor was reported as 6.1-magnitude by the Japan Meteorological Agency.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X