For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

60 வருடங்களாக ஒரே மாடல் ஹேண்ட்பேக் பயன்படுத்தும் ராணி எலிசபெத்... ஏன் தெரியுமா?

இங்கிலாந்து ராணி எலிசபெத் கடந்த 60 ஆண்டுகளாக ஒரே மாடல் ஹேண்ட்பேக்கைப் பயன்படுத்தி வருகிறார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    60 வருடங்களாக இதை மட்டும் மாற்றாமல் இருக்கும் எலிசபெத்- வீடியோ

    லண்டன்: இங்கிலாந்து ராணியான எலிசபெத் கடந்த 60 ஆண்டுகளாக ஒரே மாதிரியான சிறிய வகை ஹேண்ட்பேக்குகளையே பயன்படுத்தி வருகிறார்.

    இங்கிலாந்து நாடு ராணி எலிசபெத் 2 ஆட்சியின் கீழ் உள்ளது. இவர் கடந்த 1953ம் ஆண்டு இங்கிலாந்து ராணியாக முடி சூடினார். இவர் ராணியாக பதவியேற்று 64 ஆண்டுகள் ஆகின்றன.

    இங்கிலாந்து அரச பரம்பரையினர் அணியும் ஆடைகள் எப்போதுமே பேஷன் உலகின் கவனிக்கத் தக்கவை. அந்தவகையில், மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் 92 வயதான ராணி எலிசபெத்தின் உடைகளும் இருக்கும்.

    ஒரே ஹேன்ட் பேக்

    ஒரே ஹேன்ட் பேக்

    ஆனால், விதவிதமான உடைகள் அணிந்தாலும், கடந்த 60ஆண்டு காலமாக அவர் ஒரே மாதிரியான ஹேண்ட் பேக் மாடலையே பயன்படுத்தி வருகிறார். அதிக உலகநாடுகளுக்குப் பயணம் செய்தவர் என்ற புகழுக்குச் சொந்தக்காரரான எலிசபெத், அரசு விழா உட்பட வெளி நிகழ்ச்சிகள் அனைத்திலும் சிறிய வடிவத்தில் உள்ள கைப்பையையே கையில் வைத்துள்ளார்.

    பேக் இல்லாத ராணியைப் பார்க்க முடியாது

    பேக் இல்லாத ராணியைப் பார்க்க முடியாது

    "கையில் ஹேண்ட்பேக் இல்லாமல் தனது உடையலங்காரம் நிறைவு பெற்றதாக ராணி ஒருபோதும் கருதமாட்டார். நாங்கள் வடிவமைத்து தருவதை எல்லாம் எப்போதும் ராணி அணிய விரும்ப மாட்டார்.

    மேக்கப்பில் கவனம்

    மேக்கப்பில் கவனம்


    தனக்கு எது தேவை, எது பொருத்தமாக இருக்கும் என்பதை சரியாக தேர்வு செய்து அதையே அவர் அணிந்து கொள்வார்" என்கிறார் பிரிட்டிஷ் பிராண்டான லானரின் சி இ ஓ ஹெரால்ட் பாட்மர்.

    மாறாத பேக்

    மாறாத பேக்

    ஆடைகள் விசயத்தில் பேஷனுக்குத் தகுந்தவாறு மாற்றிக் கொள்ளும் ராணி எலிசபெத், 60 ஆண்டுகளாக தனது ஹேண்ட்பேக்கின் மாடலை மட்டும் மாற்ற விரும்பவில்லை. கடந்த 50களில் இந்த மாடல் ஹேண்ட்பேக்கை அவரது அம்மா, அவருக்கு வாங்கிக் கொடுத்துள்ளார். அதுமுதல், அதே மாடலைத் தான் அவர் பயன்படுத்தி வருகிறார்.

    English summary
    For almost 60 years, Queen Elizabeth II has been carrying a near-identical version of the same bag, according to New Idea Magazine.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X