For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இங்கிலாந்து ராணி எலிசெபத்தின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? கேட்டா கிறுகிறுக்கும்!

இங்கிலாந்து ராணி எலிசெபத்தின் சம்பளம் இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

லண்டன்: இங்கிலாந்து ராணி எலிசெபத்தின் சம்பளம் 78 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது என இங்கிலாந்து அரண்மனை தெரிவித்துள்ளது. இதன்மூலம் அவரது சம்பளம் 76.1 மில்லியன் பவுண்ட்டாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ரூபாய் மதிப்பின் படி அவரது சம்பளம் 638 கோடி ரூபாய் ஆகும்.

கடந்த 1953-ம் ஆண்டு ஜூன் 2-ம் தேதி பிரிட்டன் அரியணையில் ஏறியவர் ராணி இரண்டாம் எலிசபெத். இவர் பதவியேற்று இன்றுடன் 64 ஆண்டுகள் ஆகின்றன.

பிரிட்டனில் நம்பர் பிளேட் இல்லாமலும் டிரைவிங் லைசென்ஸ் இல்லாலும் கார் ஓட்ட அதிகாரம் படைத்த ஒரே ஒருவர் ராணிதான். இவர் எந்த நாட்டுக்குச் செல்லவும் பாஸ்போர்ட் தேவையில்லை. உலகிலேயே அதிக நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்த உலகத் தலைவர் இவர்தான்.

76.1 மில்லியன் பவுண்ட்

76.1 மில்லியன் பவுண்ட்

இங்கிலாந்து நாடு ராணி எலிசபெத் II ஆட்சியின் கீழ் உள்ளது. இந்த நிதி ஆண்டின் முதல், பிரிட்டிஷ் அரசிடமிருந்து 76.1 மில்லியன் பவுண்ட் பெற்றுக்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட இது 78 சதவீதம் அதிகமாகும்.

42.8 மில்லியன் பவுண்ட்

42.8 மில்லியன் பவுண்ட்

கடந்த நிதியாண்டின் போது, அரசிக்கு 42.8 மில்லியன் பிரிட்டிஷ் அரசு வழங்கியது. அந்த பணத்தை கொண்டு, அவருடைய பயண செலவுகள், பாதுகாப்பு, ஊழியர்கள் மற்றும் அரச அரண்மனையின் பராமரிப்பு ஆகியவற்றிற்காக செலவிட்டார். அந்த தொகையின் ஒரு பகுதி அவருடைய குடும்பத்தினருக்கும் வழங்கப்பட்டது.

இருமடங்காக உயர்வு

இருமடங்காக உயர்வு

இந்நிலையில் இந்த ஆண்டு ராணியின் சம்பளம் இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த தொகை ராணி மற்றும் அவர்கள் குடும்பத்தினர்கள் வசிக்கும் பக்கிங்ஹாம் அரண்மனையை மேம்படுத்த உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.638 கோடி

ரூ.638 கோடி

ராணி எலிசெபத்தின் செலவுகளை சமாளிக்க வசதியாக இந்த சம்பள உயர்வு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ரூபாய் மதிப்பின்படி 638 கோடி ரூபாய் ஆகும்.

பிரிட்டன் அரண்மனை அறிக்கை

பிரிட்டன் அரண்மனை அறிக்கை

இதுகுறித்து பிரிட்டன் அரண்மனை வெளியிட்ட அறிக்கையில் மகாராணியின் அலுவல்பூர்வ செலவுகள், பொது நிதியில் இருந்து செலவிடப்படுகின்றன. இதற்கு மாற்றாக கிரவுன் எஸ்டேடின் வருமானத்தை அரசிடம் மகாராணி வழங்கி வருகிறார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பணியாளர்களுக்கு தனி

பணியாளர்களுக்கு தனி

இதனிடையே மகாராணி 2-வது எலிசெபத்துக்காக பணியாற்றும் ஊழியர்கள், அவரது பயண செலவுகள் ஆகியவற்றுக்கான ஊதியம் மற்றும் செலவினங்கள் வழங்குவதற்காக தனிச் சட்டம் மூலம் பிரிட்டன் அரசு சார்பில் நிதி வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

English summary
The Queen received £42.8 million ($54.6 million) in tax-free income from the state last year as her annual "sovereign grant." This year the payment will balloon by 78% to £76.1 million ($97 million). This pay will help to refurbish Buckingham Palace.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X