For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆண்டுதோறும், ரேபிஸுக்கு பலியாகும் 24,000 ஏழை ஆப்பிரிக்கர்கள்: அதிர்ச்சித் தகவல்

Google Oneindia Tamil News

டாகர்: ஆண்டுதோறும் உலக மக்களில் சுமார் 55 ஆயிரம் பேர் வெறிநாய்க்கடியால் பலியாவதாக தெரிய வந்துள்ளது.

வெறிநாய்க்கடியால் ரேபிஸ் என்ற நோய் தாக்குதலுக்கு ஆளாகி அப்பாவி மக்கள் பலியாவதைத் தடுக்க உலக நாடுகள் கடும் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. அதன் படி, வீட்டில் வளர்க்கப் படும் செல்லப் பிராணிகள் மற்றும் தெரு நாய்களுக்கு தடுப்பூசிப் போடும் பணி மேற்கொள்ளப் பட்டு வருகிறது.

இருந்த போதும், ஆண்டுதோறும் சுமார் 55 ஆயிரம் பேர் வெறிநாய்க்கடிக்கு ஆளாகி பலியாவதாக சமீபத்திய அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

தடுப்பு நடவடிக்கை....

தடுப்பு நடவடிக்கை....

செனகல் நாட்டு தலைநகர் டாகரில் வெறிநாய் கடி குறித்த நிபுணர்கள் மாநாட்டில், நாய்கடி மற்றும் செல்லப்பிராணி கடிப்பதால் ஏற்படும் அபாயத்தை தடுக்கும் நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது.

55 ஆயிரம் பலி...

55 ஆயிரம் பலி...

அதில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை ஒன்றில், உலகம் முழுவதும் இதன் பாதிப்பினால் ஆண்டிற்கு சுமார் 55 ஆயிரம் பேர் பலியாவதாக தெரிய வந்துள்ளது.

ஆப்பிரிக்காவில்....

ஆப்பிரிக்காவில்....

அதிலும் குறிப்பாக ஆப்பிரிக்கா நாடுகளில் மட்டும் 24 ஆயிரம் பேர் பலியாகிறார்கள் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

மருத்துவ விழிப்புணர்வு....

மருத்துவ விழிப்புணர்வு....

ஆப்பிரிக்காவில் பலி எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுவதற்கு முக்கியக் காரணம், வெறிநாய்க்கடியால் பாதிக்கப் பட்டவர்கள் அதற்குரிய மருத்துவ வசதி மேற்கொள்ளாமல் போவதே என அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப் பட்டுள்ளது.

ஊசியின் விலை....

ஊசியின் விலை....

வெறி நாய்க்கடிக்கு போடப்படும் ஒரு ஊசியின் விலை இந்திய மதிப்பில் சுமார் ரூ.800. பொதுவாக நாய் கடியால் பாதிக்கப்படுபவர் குறைந்தபட்சம் 4 முதல் 5 ஊசி போட வேண்டும்.

இலவச மருத்துவ உதவி...

இலவச மருத்துவ உதவி...

பொதுவாக மக்களின் வறுமையே பலி எண்ணிக்கை அதிகரிப்பின் காரணமாக சொல்லப்பட்டாலும், சில நாடுகளில் வெறிநாய்க்கடிக்கான மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

English summary
Rabies kills 24,000 people a year in Africa, most of them children, because many on the world's poorest continent cannot afford the cost of the vaccine, experts said on Thursday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X