For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரேடார் கோளாறு: நியூசிலாந்தில் 2 மணிநேரம் விமான சேவை நிறுத்தம்

By Siva
Google Oneindia Tamil News

வெலிங்டன்: நியூசிலாந்து நாட்டில் ரேடார் கோளாறு காரணமாக 2 மணிநேரம் விமான போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டது.

நியூசிலாந்து நாட்டில் விமான போக்குவரத்து கண்காணிப்பு ரேடாரில் நேற்று மதியம் 2.41 மணிக்கு கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து நியூசிலாந்தில் அனைத்து விமான போக்குவரத்து சேவைகளும் உடனடியாக நிறுத்தி வைக்கப்பட்டது. கோளாறை சரி செய்ய விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு ஏஜென்சிக்கு 2 மணிநேரம் ஆனது.

அதன் பிறகு மாலை 4.30 மணி அளவில் மீண்டும் விமான போக்குவரத்து சேவை துவங்கியது.

இது குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் சைமன் பிரிட்ஜஸ் கூறுகையில்,

ரேடார் கோளாறு ஏற்பட்டபோது ஏற்கனவே வானில் பறந்து கொண்டிருந்த விமானங்கள் ரேடியோ மூலம் தொடர்பில் இருந்தன. பயணிகளின் பாதுகாப்பு தான் எங்களுக்கு முக்கியம். அதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார்.

கோளாறு ஏற்பட்டபோது வானில் பறந்து கொண்டிருந்த விமானங்கள் தரையிறக்கப்பட்டன. ஆக்லாந்து விமான நிலையத்தின் சர்வதேச முனையத்தில் 3 விமானங்களும், உள்நாட்டு முனையத்தில் 7 விமானங்களும் தரையிறக்கப்பட்டன.

English summary
All flights across New Zealand was grounded due to a radar glitch. Air Traffic control agency took two hours to fix the problem.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X