For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காத்மாண்டுவில் கனமழை: ஒதுங்க இடம் இன்றி குளிரில் நடுங்கிய மக்கள்

By Siva
Google Oneindia Tamil News

காத்மாண்டு: நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நேபாள மக்களின் கவலையை அதிகரிக்கும் வகையில் அங்கு கன மழை பெய்துள்ளது.

நேபாளத்தில் சனிக்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 3 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர், ஆயிரக்கணக்கானோர் காயம் அடைந்துள்ளனர். இந்நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

Rain pours in woes as Kathmandu shivers at 13°C

நிலநடுக்கத்தை அடுத்து நேபாளத்தில் அவ்வப்போது நில அதிர்வுகள் ஏற்பட்டு வருகிறது. அதில் சில சக்திவாய்ந்தவையாக உள்ளது. நிலநடுக்கத்தால் கடந்த 2 இரவுகளை மக்கள் தெருக்களில் கழித்தனர். இந்நிலையில் நேற்று இரவு காத்மாண்டுவில் கன மழை பெய்தது. இதையடுத்து தட்பவெட்ப நிலை 13 டிகிரி செல்சியஸ் ஆனதால் மக்கள் குளிரால் நடுங்கினர்.

ஒதுங்கவும் இடம் இல்லாமல் மழையில் நனைந்து குளிரில் நடுங்கி நேற்றைய இரவை கழித்தனர். காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் மீட்பு விமானத்தை எதிர்பார்த்து நூற்றுக் கணக்கான இந்தியர்கள் குளிரில் நடுங்கியபடியே நேற்று இரவு காத்திருந்தனர்.

பலுவதார் என்ற இடத்தில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி டென்ட்டுகளில் தூங்கினர். இரவில் நில அதிர்வு ஏற்பட்டால் அவர்களை எச்சரிக்க சில வாலிபர்கள் தூங்காமல் விழித்திருந்தனர்.

English summary
Heavy rain added woes of people in Kathmandu who are already jolted by the saturday's quake and aftershocks.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X