For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வளைகுடா நாடுகளில் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம்

By Siva
Google Oneindia Tamil News

ரியாத்: சவுதி அரேபியா மற்றும் பிற வளைகுடா நாடுகளில் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.

புனித ரமலான் மாதம் துவங்கியதும் உலக முஸ்லீம்கள் நோன்பு வைத்து வந்தனர். இந்நிலையில் சவுதி அரேபியா மற்றும் பிற வளைகுடா நாடுகளில் பிறை தெரிந்ததை அடுத்து இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.

Ramzan celebrated in Gulf countries today

சவுதி, ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கத்தார், ஜோர்டான், பஹ்ரைன், லிபியா, துருக்கி, பிலிப்பைன்ஸ், சீனா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

ரியாத்தில் இன்று காலை 5.35 மணிக்கு 625 இடங்களில் பெருநாள் தொழுகை நடத்தப்பட்டது. மேலும் இன்று ரம்ஜான் கொண்டாடும் பிற நாடுகளிலும் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது. முஸ்லீம்கள் சக முஸ்லீம்களுக்கு வாழ்த்து தெரிவித்து இனிப்பு வழங்கி தங்களது மகிழ்ச்சியை தெரிவித்தனர்.

இந்தியா, பாகிஸ்தான் மற்றும் அதன் அண்டை நாடுகளில் பிறை தெரிவதை பொறுத்து நாளை அல்லது நாளை மறுநாள் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும். பிறை குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளியிடப்படக்கூடும்.

English summary
Eid Al-Fitr has been celebrated in Saudi Arabia and other gulf countries on friday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X