ஜஸ்ட் வெறும் "11 நிமிஷம்" தானே.. அதுக்கு இவ்ளோ பெரிய தண்டனையா.. குறைத்த நீதிபதி.. நாடே ஷாக்!
பெர்ன், ஸ்விட்சர்லாந்து: வெறும் 11 நிமிஷம்தான் அந்த பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார்.. அதனால் குற்றவாளிக்கு தண்டனையை குறைக்கிறேன் என்று ஒரு நீதிபதி தீர்ப்பளித்திருக்கிறார்.. அதுவும் பெண் நீதிபதி..!
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உலகம் முழுவதும் பெருகி கொண்டுதான் இருக்கிறது.. குறிப்பாக மேற்கத்திய நாடுகளில் ஒன்றான ஸ்விட்சர்லாந்தில் இப்படிப்பட்ட குற்றங்கள் அதிகம்..
அந்த நாட்டில், ஐந்தில் ஒரு பெண் பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வு ஒன்று கூறுகிறது. யார் ஆட்சிக்கு வந்தாலும், அந்த நாட்டின் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இந்நிலையில் மேலும் ஒரு கொடுமையான சம்பவம் நடந்துள்ளது.. இந்த நாட்டில் பசல் என்ற நகரம் உள்ளது..
என்ன நடக்கப் போகுதோ?.. எதிர்ப்புகளுக்கு மத்தியில் களமிறங்கும் தென்றல் வந்து என்னைத் தொடும்!

பலாத்காரம்
கடந்த 2020, பிப்ரவரி மாதத்தில் 33 வயதான ஒரு பெண்ணை 2 பேர் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்துவிட்டனர்.. அந்த பெண் ஒரு அபார்ட்மென்ட்டில் வசித்து வருகிறார்.. சம்பந்தப்பட்டவர்களும் அதே அப்பார்ட்மென்ட்தான்.. 33 வயது பெண்ணை இவர்கள் 2 பேரும் தொடர்ந்து கண்காணித்தபடியே வந்துள்ளனர்.. பிறகு அன்றைய தினம் நேரம் பார்த்து கூட்டு பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர்.. இதில் கொடுமை என்னவென்றால், அந்த 2 பேரில் ஒருத்தருக்கு 17 வயசுதான் ஆகிறதாம்.. இன்னொருத்தருக்கு 32 வயதாகிறது..

சிறுவன்
இந்த கேஸ் கோர்ட்டுக்கு சென்றது.. 17 வயது சிறுவனை, சிறார் கோர்ட் தனியாக விசாரித்து வருகிறது.. இன்னொருத்தர் போர்ச்சுகலை சேர்ந்தவராம்.. இவர் மீதான வழக்கும் விசாரிக்கப்பட்டு, 51 மாதங்கள் சிறை தண்டனையும் அளிக்கப்பட்டுள்ளது.. ஆனால், அந்த இளைஞர் தன்னுடைய தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளார்.. அந்த வழக்கை ஒரு பெண் நீதிபதி விசாரித்தார்.. இறுதியில் தன்னுடைய தீர்ப்பில், குற்றவாளி அந்த பெண்ணை 11 நிமிஷம் மட்டுமே பாலியல் வன்புணர்வு செய்திருக்கிறார்...

இளைஞர்
மேலும் அந்த பெண், லாட்ஜில் வைத்து ஒருமுறை அந்த இளைஞருக்கு சில சிக்னல்களை முன்கூட்டியே தந்திருக்கிறார்.. அதனால், மிக குறைந்த நேரமே குற்றம் நடந்துள்ளதால், ஸ்விஸ் சட்டதிட்டங்களுக்கு இணங்கி அந்த இளைஞருக்கு 51 மாதங்களில் இருந்து 36 மாதங்களாக தண்டனையை குறைக்கிறேன்" என்று தீர்ப்பளித்தார். இப்படி ஒரு தீர்ப்பை கேட்டு, அந்த நாட்டு பெண்கள் கொந்தளித்து போயுள்ளனராம்.. அந்த குற்றவாளி ஏற்கனவே ஜெயிலில் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்..

கொந்தளிப்பு
எப்படியும் இன்னும் கொஞ்ச நாளில் விடுலையாகிவிடுவாராம்.. குற்றவாளிக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனையை குறைத்ததற்கு எதிராக நூற்றுக்கணக்கிலான பெண்கள் பசல் கோர்ட்டின் முன் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்... பாலியல் குற்றங்களுக்கு எதிரான சட்டங்கள் வலுவாக இல்லை எனவும் கோஷமிட்டு போராடி வருகிறார்கள்... இதில் எல்லாவற்றையும்விட ஷாக்கில் உள்ளது பாதிக்கப்பட்ட அந்த அப்பார்ட்மென்ட் பெண்தானாம்..!