For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கழுதை பாதி... வரிக்குதிரை மீதி... கலந்து செய்த கலவை ‘ஜான்கி’ (எ) வரிக்கழுதை

Google Oneindia Tamil News

ரோம்: இத்தாலியில், கழுதை மற்றும் வரிக்குதிரை இரண்டும் கலப்பினம் செய்யப் பட்டு புதிதாக உருவான உயிரினத்திற்கு வரிக் கழுதை என ஆராய்ச்சியாளர்கள் பெயரிட்டுள்ளனர்.

இந்தப் புதிய உயிரினம் பார்ப்பதற்கு பாதி உடல் கழுதை போன்றும், மீதி வரிக் குதிரை போன்றும் தோற்றமளிக்கிறது.இந்தப் புதிய உயிரினம் இயற்கையான கலப்பினச் சேர்க்கையில் உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆய்வுகள்....

ஆய்வுகள்....

உயிரியல் தத்துவத்துக்கு கோட்பாடுகளை வகுத்த டார்வின் காலம் தொட்டு உயிரினங்களின் த்தில் இருந்தே உயிரினங்களின் வாழ்க்கை ரகசியம் தொடர்பாக பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு பல கலப்பின உயிரினங்கள் உருவாக்கப் பட்டு வருகின்றன.

புதிய உயிரினம்....

புதிய உயிரினம்....

அந்தவகையில், இத்தாலி நாட்டின் பிளாரன்ஸ் நகரில் ஆண் வரிக்குதிரை மற்றும் பெண் கழுதையின் கலப்பினச் சேர்க்கையின் பலனாக புதிய உயிரினம் ஒன்று இயற்கையாகவே உருவாகியுள்ளது..

வரிக்கழுதை....

வரிக்கழுதை....

அதற்கு ஆராய்ச்சியாளர்கள் ‘ஜான்கி' எனப் பெயரிட்டுள்ளனர். அதாவது தமிழில் வரிக்கழுதை என கொள்ளலாம்.

குரோமோசோம்கள்....

குரோமோசோம்கள்....

வரிக்குதிரையும், கழுதையும் குதிரை இனத்தின் ஒரு பகுதியே, ஆனபோதும், உயிர் உற்பத்திக்கு தேவையான 'குரோமோசோம்'களின் எண்ணிக்கையில் ஒவ்வொரு விலங்கினத்திலும் வேறுபாடு உண்டு.

இயற்கையாக....

இயற்கையாக....

இந்நிலையில், பண்ணையில் வளர்க்கப்பட்டு வந்த ஒரு ஆண் வரிக்குதிரை ஒன்று வேலி தாண்டி தப்பிச் சென்று, வயலில் மேய்ந்துக்கொண்டிருந்த பெண் கழுதையுடன் இனச் சேர்க்கையில் ஈடுபட்டுள்ளது. அதன் விளைவாக உருவானது தான் இந்தப் புதிய இனம்.

கலந்து செய்த கலவை....

கலந்து செய்த கலவை....

இந்த வரிக்கழுதைக் குட்டியின் உடல், வரிக்குதிரையின் கால் மற்றும் கழுதையின் முகம் மற்றும் உடலமைப்பைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முதல் உயிரினம்....

முதல் உயிரினம்....

இதற்கு முன்னரும், வரிக்குதிரை - குதிரை, ஆண் கழுதை - பெண் குதிரை போன்றவை கலப்பினச் சேர்க்கையில் ஈடுபட்டு குட்டிகளை ஈன்றுள்ளன. இருப்பினும், ஆண் வரிக்குதிரையும், பெண் கழுதையும் இணைந்து ஒரு குட்டியை ஏற்படுத்தியது இதுவே முதல் முறை என்று விலங்கியல் ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

English summary
A rare crossbreed between a zebra and a donkey was born in Italy four months ago. The awkwardly adorable ‘zonkey’, named Ippo, is the only one of her kind in Italy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X