For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமேசான் காட்டில் தீ.. அழியும் நிலையில் அனகோண்டா, அரிய வகை உயிரினங்கள்.. கவலையில் வனஉயிரின ஆர்வலர்கள்

Google Oneindia Tamil News

பிரேசிலியா: அமேசான் காட்டுத்தீயால் அரியவகை பாம்புகள் அழியும் சூழலில் இருப்பதாக வன உயிரின ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

உலகளவில் மிகவும் பிரபலமான காடு என்றால் அது அமேசான் காடுகள்தான். இங்கு அரிய வகை மரங்கள், மூலிகை செடிகள, அரிய வகை விலங்குகள் ஆகியன உள்ளன.

பரவிய காடுகள்

பரவிய காடுகள்

அனகோண்டா படம் பார்த்தவர்கள் யாரும் அனகோண்டா பாம்புகளை மறக்க மாட்டார்கள். அந்த வகை பாம்புகள் அமேசான் காட்டில் இருக்கிறது. இந்த காடு பிரேசில், கொலம்பியா, வெனிசுலா, பொலிவியா, கயானா, பிரெஞ்ச் கயானா உள்ளிட்ட நாடுகளில் பரவி வருகிறது.

அழியும் நிலை

அழியும் நிலை

இந்த நாடுகளில் அதிகளவில் பிரேசிலில்தான் காடுகள் பரவியுள்ளன. இங்கு அதிகளவில் காட்டுத் தீ பரவியுள்ளது. இந்த நிலையில் பற்றி எரியும் காட்டுத் தீயால் அரி.ய வகை உயிரினங்கள் அழியும் நிலையில் உள்ளன.

தீயை அணைக்க

தீயை அணைக்க

அதுபோல் காட்டுத்தீயின் உஷ்ணம் தாங்க முடியாமல் பல வகையான பாம்புகள் தங்கள் இருப்பிடத்தை விட்டு வெளியேறுகின்றன. மேலும் சில பாம்புகள் அழியும் நிலையில் உள்ளன. தீயை அணைக்க ராணுவ படைகள் போராடி வருகின்றனர்.

தீயை அணைக்க...

தீயை அணைக்க...

அடுத்த மாதம் 24-ஆம் தேதி வரை ஒரு மாதத்துக்கு தீயணைப்புப் பணியில் ராணுவத்தினர் ஈடுபடுவர் என பிரேசில் அரசு கூறுகிறது. இந்த தீயை அணைக்க வலியுறுத்தி மக்கள் போராடி வருகின்றனர்.

English summary
Rare Snakes are going to destroy in this forest fire in Amazon. People urges Brazil government to extinguish this fire.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X