For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஏ,பி,சி நீ வாசி... சாட்டிலைட் போட்டோக்களை வைத்து 'ஆல்பாபெட்' வித்தை காட்டும் நாஸா

Google Oneindia Tamil News

நியூயார்க்: பூமி தொடர்பாக நாசாவின் செயற்கைக் கோள்கள் எடுத்து அனுப்பிய புகைப்படங்களை வைத்து ஒரு விளையாட்டு காட்டியுள்ளார் ஆடம் வி வைலாண்ட் என்ற ஆய்வாளர்.

அதாவது அந்த செயற்கைக் கோள் படங்களில் காணப்படும் எழுத்து வடிவத்தை வைத்து ஒரு தொகுப்பை வெளியிட்டுள்ளார் இவர். பார்க்க வித்தியாசமாக மட்டுமல்லாமல் வியப்பாகவும் இது இருக்கிறது.

பகலோ அல்லது இரவோ வானத்தை சிறிது நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தால், மேகம் அல்லது நட்சத்திரங்களில் விதவிதமான உருவங்கள் நமது பார்வைக்குத் தோன்றும். நமது கற்பனைக்கு ஏற்ப அவை யானையாகவோ, வடை சுடும் பாட்டியாகவோ தெரியும். அட, வடைச் சட்டியின் அடி பாகத்தை வைத்து இதுதான் பூமி என்று பேஸ்புக்கில் ஏமாற்றியவர்களும் உண்டு.

அந்தவகையில், கனடா நாட்டில் ஏற்பட்ட புகை மூட்டத்தை நாசாவின் விண்கலம் படம் பிடித்திருந்தது. அதைப் பார்த்த நாசாவின் புவி கண்காணிப்பு அமைப்பு அதிகாரியும், அறிவியல் குறித்த எழுத்தாளருமான ஆடம் வி வைலாண்டிற்கு, புகையின் அமைப்பு ‘வி' என்ற ஆங்கில எழுத்துப் போன்ற தோற்றத்தைக் காட்டியுள்ளது.

அதனைத் தொடர்ந்து, நாசாவின் பூமியின் நிலத்தோற்றம் குறித்த புகைப்படங்களில் இருந்து ஆங்கில எழுத்துக்களின் அமைப்பைத் தேடும் முயற்சியில் இறங்கினார் ஆடம். இதற்கு அவரது நண்பர்களும் உதவி புரிந்துள்ளனர்.

தற்போது தனது புகைப்படத் தொகுப்பை அவர் வெளியிட்டுள்ளார். இதோ அந்த வித்தியாசமான தொகுப்பு உங்களுக்காக...

எ...

எ...

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து அமெரிக்காவிலுள்ள உடா பகுதியில் எடுக்கப்பட்ட பாறையின் தோற்றம் இது. கடந்தாண்டு ஜனவரி மாதம் 22ம் தேதி இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. கிரீன் ஆற்றின் பாதை பார்ப்பதற்கு ஆங்கில எழுத்தான ‘எ' போன்ற தோற்றத்தைத் தருகிறது.

பி...

பி...

இந்தப் புகைப்படம் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் எடுக்கப்பட்டது. ஆபரேஷனல் லேண்ட் இமேஜரால் எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படத்தில், அர்கான்சாஸ் நதியும், அதன் வளைவுகளும் சேர்ந்து பி போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.

சி...

சி...

பிராமின் தீவை விண்வெளியில் இருந்து கடந்த 2011ம் ஆண்டு ஜனவரி மாதம் எடுத்த புகைப்படம் இது. செயற்கையாக உருவாக்கப்பட்ட இந்தத் தீவானது பார்ப்பதற்கு சி போன்ற தோற்றத்தில் உள்ளது.

டி...

டி...

கடந்த 2000ம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படம் இது. ஜேம்ஸ் வளைகுடாவில் உள்ள அகிமிஸ்கி தீவின் தோற்றம், டி போன்ற தோற்றத்தைத் தருகிறது.

இ...

இ...

2009ம் ஆண்டு அக்டோபர் 25ம் தேதி எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தை நாசாவின் அக்வா சேட்டிலைட் எடுத்துள்ளது. நியூசிலாந்திலுள்ள கடற்கரையின் தோற்றம் இது.

எப்ஃ....

எப்ஃ....

திபெத்தின் தென்கிழக்குப் பகுதியில் பனி படந்த மலைகளும் சமவெளிகளும் பார்ப்பதற்கு எப்ஃ போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகும்.

ஜி...

ஜி...

கடந்த 2001ம் ஆண்டு பினாகி தீவினை சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து எடுத்த புகைப்படம் இது. பார்ப்பதற்கு ஜி போன்ற தோற்றத்தில் உள்ளது.

ஹெச்...

ஹெச்...

கிர்கைஸ்தானின் தென்மேற்குப் பகுதியில் நதிகள் பாயும் அழகை கடந்தாண்டு ஆபரேஷனல் லேண்ட் இமேஜர் எடுத்த புகைப்படம் இது. இதில் நதி பாயும் பாதையின் அமைப்பு பார்ப்பதற்கு ஹெச் போன்று உள்ளது.

ஐ...

ஐ...

ஐ எனச் சொல்ல வைக்கிறது இந்தப் புகைப்படம். கடந்த 2007ம் ஆண்டு நாசாவின் டெர்ரா செயற்கைக்கோல், அந்தமான் பகுதியை புகைப்படம் எடுத்தது.

ஜே...

ஜே...

இந்தாண்டு ஜூலை மாதம் எடுக்கப்பட்ட புகைப்படம் இது.. ஆஸ்திரேலியாவிலுள்ள டவுன்ஸ்வில்லா அருகே எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படம் இது.

கே...

கே...

இந்தப் புகைப்படமும் இந்தாண்டு எடுத்தது தான். கனடாவின் மிட்டிமாடாலிக் பகுதியில் உல்ள சிர்மிலிக் தேசியபூங்காவின் குளத்தின் அமைப்பு இது.

எல்...

எல்...

அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியில் எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படத்தில், பனி சூழ்ந்த இடமொன்று இப்படி எல் போன்று தோற்றமளிக்கிறது. இது கடந்த 2008ம் ஆண்டு எடுக்கப்பட்டது.

எம்...

எம்...

இந்தப் புகைப்படம் இந்தாண்டு ஆகஸ்ட் மாதம் எடுக்கப்பட்டுள்ளது. இது கிர்கிஸ்தானில் உள்ள டியான் ஷான் மலைத்தொடர் ஆகும். மலைப்பகுதிகளுக்கு இடையேயுள்ள சமவெளி, எம் போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது.

என்...

என்...

பசிபிக் பெருங்கடலின் மீது கப்பல் செல்லும் பாதையை டெர்ரா செயற்கைக்கோள் படம் பிடித்துள்ளது. இது பார்ப்பதற்கு என் போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது.

ஓ...

ஓ...

மரிடானியா பகுதியில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது. விண்கல் விழுந்ததால் ஏற்பட்ட பள்ளம் இது எனக் கூறப்படுகிறது. பார்ப்பதற்கு ஓ போன்று தோற்றமளிக்கிறது.

பி...

பி...

கனடாவில் உள்ள மெகென்சி ஆற்றின் டெல்டா பகுதியின் படம் இது. சற்று கலர் மாற்றம் செய்யப்பட்டுள்ள இந்தப் புகைப்படம் பார்ப்பதற்கு பி போன்ற தோற்றத்தைத் தருகிறது.

க்யூ...

க்யூ...

இந்தியாவில் எடுக்கப்பட்டது இந்தப் புகைப்படம். கடந்த 2004ம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படத்தில் உள்ள பள்ளம் க்யூ போன்று உள்ளது.

ஆர்...

ஆர்...

இந்தாண்டு ஜனவரி மாதம் எடுக்கப்பட்ட புகைப்படம் இது. அர்ஜெண்டினாவிலுள்ள லாகோமென்ட்ஸ் பகுதியில் எடுக்கப்பட்டது.

எஸ்...

எஸ்...

அட்லாண்டிக் கடல் பகுதியில் மேக்கூட்டங்கள் இணைந்து இந்த தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை டெர்ரா செயற்கைக் கோள் கடந்த 2009ம் ஆண்டு படமெடுத்துள்ளது.

டி...

டி...

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படமானது இரண்டு சாலைகளை இணைக்கும் தோற்றம் ஆகும். இது இந்தாண்டு மார்ச் மாதம் எடுக்கப்பட்டது.

யு...

யு...

உடாவில் உள்ள கூஸ்நெக் மாநில பூங்காவை கடந்த 2004ம் ஆண்டு ஐகோனோஸ் செயற்கைக்கோள் எடுத்த புகைப்படம் இது.

வி...

வி...

ரஷ்யாவில் உள்ள பெரிய மற்றும் இயக்கத்திலுள்ள எரிமலையான ஷிப்லூச்சின் புகைப்படம் இது. இந்தாண்டு மார்ச் மாதம் எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படத்தில், எரிமலையிலிருந்து வெளிவரும் சாம்பல், பனி சூழ்ந்த பகுதியில் வி போன்று காட்சியளிக்கிறது.

டபிள்யூ...

டபிள்யூ...

சிவப்புக் கடலின் மேற்பகுதியில் தூசுக்கள் பறந்து இது போன்ற டபிள்யூ வடிவத்தை ஏற்படுத்தியுள்ளது. இது கடந்த 2009ம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படம்.

எக்ஸ்...

எக்ஸ்...

கிரீன்லாந்தில் உள்ள லெய்டி பனியாற்றின் தோற்றம் இப்படி உள்ளது. இது கடந்த 2012ம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகும்.

ஒய்...

ஒய்...

நமியாவிலுள்ள உகாப் நதியின் புகைப்படம் இது. ஆனால், இது அதன் உண்மையான நிறத்தோற்றாம் அல்ல. இப்புகைப்படம் கடந்த 2000ம் ஆண்டு எடுக்கப்பட்டது.

இசட்...

இசட்...

கனடாவில் கடந்த 2012ம் ஆண்டு ஏற்பட்ட காட்டுத் தீயின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் இது. காட்டுத் தீயினால் மேல் எழும்பிய புகை, இசட் போன்ற தோற்றத்தில் காணப்படுகிறது.

English summary
NASA Earth Observatory writer and social media manager Adam P. Voiland has released a photo's collection of nasa's satellite collection in the shape of english alphabet from A to Z.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X