For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

என் கூட "உறவு" வச்சுக்க ஆசைப்பட்டார் இம்ரான் கான்.. கிலானி என்னை தடவினார்.. குண்டை போட்ட சிந்தியா!

சிந்தியா ரிச்சி என்பவர் இம்ரான்கான் பற்றி ஒரு புது தகவலை கூறியுள்ளார்

Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்: கொரோனா ஒரு பக்கம் நாட்டை சூறையாடி வருகிறது என்றால்.. மறுபக்கம் புதிய புயல் ஒன்று பாகிஸ்தானை புரட்டி எடுத்து வருகிறது.. அந்தப் புயலின் பெயர் சிந்தியா ரிச்சி.. இவருடன் பிரதமர் இம்ரான் கான் உறவு வைத்துக் கொள்ள ஆசைப்பட்டார் என்ற தகவல் வெளியாகி இப்போது அந்த நாட்டை கலக்கிக் கொண்டிருக்கிறதாம்.

அமெரிக்காவைச் சேர்ந்தவரும், பாகிஸ்தானில் பத்து வருட காலம் வசித்தவருமான பத்திரிகையாளர் சிந்தியா ரிச்சி. இவரை வைத்துத்தான் இப்போது பாகிஸ்தானில் புது சர்ச்சை வெடித்துள்ளது. அவர் அடுத்தடுத்து போட்ட வெடிகுண்டு டைப்பிலான டிவீட்டுகள்தான் சிந்தியா புயல் பாகிஸ்தானை கலங்கடிக்க முக்கியக் காரணம்.

முதலில் மறைந்த முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோ குறித்து ஒரு பரபரப்பு டிவீட்டைப் போட்டார் சிந்தியா. மே 28ம் தேதி போட்ட அந்த டிவீட்டில் பெனாசிர் பூட்டோ மட்டும் இருந்திருந்தால், தனது கணவர் ஆசிப் அலி சர்தாரியுடன் உறவு வைத்த பெண்களை தனது பாதுகாவலர்களை விட்டு பலாத்காரம் பண்ணச் சொல்லியிருப்பார் என்று அதிர்ச்சித் தகவலை போட்டிருந்தார்.

அடுத்தடுத்து கொரோனாவால் 20 பேர் பலி, மூடிமறைத்த பெரம்பூர் ரயில்வே மருத்துவமனை? சுகாதார துறை நோட்டீஸ்அடுத்தடுத்து கொரோனாவால் 20 பேர் பலி, மூடிமறைத்த பெரம்பூர் ரயில்வே மருத்துவமனை? சுகாதார துறை நோட்டீஸ்

பரபரப்பு

பரபரப்பு

இந்த பரபரப்பால் கிளம்பிய அதிர்ச்சி நீங்குவதற்குள்ளாக, அடுத்து இன்னொரு பரபரப்பைக் கிளப்பினார்.கடந்த சனிக்கிழமை அவர் போட்ட டிவீட்டில், பாகிஸ்தான் முன்னாள் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறியிருந்தார். அதேபோல முன்னாள் பிரதமர் யூசுப் ரஸா கிலானி, மற்றும் ஒரு கேபினட் அமைச்சர் ஆகியோர் தன்னைத் தடவி அத்துமீறியதாக கூறியிருந்தார். ஆனால் இந்த புகார்களை கிலானியும், மாலிக்கும் உடனே மறுத்து விட்டனர்.

ஜர்தாரி

ஜர்தாரி

பாகிஸ்தான் மக்கள் கட்சியைக் குறி வைத்து வெளியான இந்த பகீர் புகார்களால் அந்தக் கட்சி ஆடிப் போயுள்ளது. சிந்தியா புகார்கள் குறித்து அமெரிக்க புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி சிந்தியா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்., அவர் மறைந்த பிரதமர் பெனாசிரையும், முன்னாள் அதிபரான ஜர்தாரியையும் அவமானப்படுத்தி விட்டார் என்று அந்தக் கட்சி கொந்தளித்துள்ளது.

சிந்தியா

சிந்தியா

இந்த நிலையில் இதையெல்லாம் தூக்கிச் சாப்பிடக் கூடிய வகையிலான இன்னொரு பகீர் புகாரை பாகிஸ்தான் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஹோஸ்ட்டான அலி சலீம் வீசி எறிந்துள்ளார். இது சிந்தியாவின் முந்தைய புகார்களை விட படு பயங்கரமாக இருக்கிறது.. காரணம் இதில் பிரதமர் இம்ரான் கான் பெயர் அடிபடுவதால். ஆம், இம்ரான் கான், சிந்தியாவுடன் செக்ஸ் உறவு வைத்துக் கொள்ள ஆசைப்பட்டாராம். அவரிடமே நேரடியாக இதுகுறித்துக் கேட்டாராம். இதை சிந்தியா தன்னிடம் தெரிவித்ததாக சலீம் கூறியுள்ளார்.

 இம்ரான்கான்

இம்ரான்கான்

இதுதான் இப்போது பெரும் விவகாரமாகியுள்ளது. இம்ரான் கான் இப்படியா கேட்டார் என்று பலரும் கிளம்பி விட்டனர். இம்ரான் கான் பிரபல கிரிக்கெட் வீரர். வேகப் பந்து வீச்சாளர். கேப்டன். அதே போல ஜாலிப் பேர்வழியும் கூட. அவரை வைத்து ஏகப்பட்ட கிசுகிசுக்கள். அவருடன் பல்வேறு பிரபலங்களும் இணைத்துப் பேசப்பட்ட காலமும் உண்டு. எனவே இந்த சிந்தியா விவகாரத்தில் இம்ரான் கான் கேட்டாலும் கேட்டிருப்பார் என்று சலசலப்பு வலுத்து வருகிறது.

 நெருக்கம்

நெருக்கம்

அலி சலீம் அளித்துள்ள ஒரு பேட்டியில் கூறுகையில், " முன்பு இம்ரான் கானுடன் நெருக்கமாக இருந்தார் சிந்தியா. இருவரும் தனிமையில் கூட தங்கியுள்ளனர். ஒரே அறையில் கூட தங்கியுள்ளனர். ஒருமுறை சிந்தியா என்னிடம் பேசுகையில், பல அந்தரங்க விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். இம்ரான் கான் தன்னுடன் செக்ஸ் வைத்துக் கொள்ள விரும்புவதாக ரொம்ப ஆசைப்பட்டுக் கேட்டதாக கூட சிந்தியா கூறியிருந்தார்.

செக்ஸ்

செக்ஸ்

அதேசமயம், ரஹ்மான் மாலிக் குறித்து சிந்தியா என்னிடம் தெரிவித்ததில்லை. அவர் பலாத்காரம் செய்திருந்தால் அதைப் பற்றி என்னிடம் சொல்லியிருப்பார். ஆனால் எப்படி எதையும் அவர் சொல்லவில்லை. இம்ரான் கான் செக்ஸ் வைத்துக் கொள்வதாக கூறியவர், ரஹ்மான் மாலிக் பலாத்காரம் செய்திருந்தால் நிச்சயம் என்னிடம் சொல்லியிருப்பாரே.. ஆனால் சொல்லவில்லை என்று கூறியுள்ளார் அலி சலீம்.

கேள்வி

கேள்வி

அலி இப்படிக் கூறியிருப்பதால் சிந்தியா சொல்வது எல்லாமே உண்மையா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மேலும் அவரது புகார்களும் கேள்விக்குறியதாக மாறியுள்ளன. அதேசமயம், ரஹ்மான் மாலிக் மீது அனுதாபம் காட்டத் தேவையில்லை. பெனாசிர் பூட்டோ கொல்லப்பட்டபோது அவரு பாதுகாப்புப் படையின் பொறுப்பாளராக இருந்தவர் அவர்தான். உண்மையில் சர்தாரி அவர் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். மாறாக அவருக்கு உள்துறை அமைச்சர் பொறுப்பைக் கொடுத்தார் அவர்.

 கிலானி

கிலானி

ஆனால் சிந்தியா வேறு விதமாக சொல்லியுள்ளார். 2011ம் ஆண்டு தன்னை ரஹ்மான் மாலிக் கெடுத்தார் என்று அவர் கூறியுள்ளார். அதாவது ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட அதேசமயத்தில்தான் தன்னை ரஹ்மான் மாலிக் கெடுத்து சீரழித்தார் என்றும் கூறியுள்ளார் சிந்தியா. இதுதான் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் முன்னாள் பிரதமரான கிலானி தனது உடலில் தொட்டுத் தடவி அசிங்கப்படுத்தினார் என்றும் அவர் கூறியுள்ளார். சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த மக்தூம் ஷஹாபுதீனும் அதே மாதிரி உடலைத் தடவினாராம்.

 பாகிஸ்தான்

பாகிஸ்தான்

சிந்தியா போட்டுள்ள இந்த சரமாரி குண்டுகளால் பாகிஸ்தானே கலங்கிப் போயுள்ளது. சரமாரியான வாதங்கள், விவாதங்கள் வெடித்துக் கிளம்பியுள்ளன. ஆனால் இவரது இந்தப் புகார்களை குப்பை என்று கூறியுள்ளது பாகிஸ்தான் மக்கள் கட்சி. இது பற்றி தாங்கள் கவலைப் படப் போவதில்லை என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது.

குறும்படங்கள்

குறும்படங்கள்

சிந்தியா ஒரு காலத்தில் பாகிஸ்தானில் இருந்தவர் ஆவார். பத்திரிகையாளராக அடையாளம் காட்டிக் கொண்டவர். பிளாக்கில் எழுதி வருகிறார். சோசியல் மீடியா ஆர்வலராகவும் அடையாளம் காட்டிக் கொண்டவர். பல முகம் கொண்டவராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார் அவர். அமெரிக்காவின் லூசியானாவைச் சேர்ந்தவர் இவர். டிபரன்ட் லென்ஸ் புரடக்ஷன் என்ற திரைப்பட நிறுவனத்திலும் பணியாற்றியுள்ளார். பாகிஸ்தான் குறித்த பல குறும்படங்களை தயாரித்துள்ளார்.

English summary
ready to marry american woman strengthen pak us ties, says imran khan
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X