For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராமர் பிறந்த உண்மையான அயோத்தி நேபாளத்தில் இருக்கிறது- ராமர் இந்தியர் அல்ல- நேபாளி: நேபாள பிரதமர் ஒளி

Google Oneindia Tamil News

காத்மாண்டு: கடவுள் ராமர் பிறந்த உண்மையான அயோத்தி நேபாளத்தில்தான் இருக்கிறது என்று நேபாள பிரதமர் ஷர்மா ஒளி (ஒலி) கூறியுள்ளார்.

Recommended Video

    'Lord Ram Is Nepali Not Indian' - Nepal Prime Minister KP Sharma Oli

    இந்தியாவின் எல்லை பகுதிகளை தங்களது நாட்டுக்குச் சொந்தமானது என கூறி சர்ச்சையை கிளப்பியவர் நேபாள பிரதமர் ஒளி. சீனாவின் தூண்டுதலால் இத்தகைய நடவடிக்கைகளை நேபாள பிரதமர் ஒளி மேற்கொண்டார்.

    பெங்களூருவில் நாளை முதல் ஜூலை 22 வரை மீண்டும் லாக்டவுன் அமல்-சொந்த ஊர்களுக்கு படையெடுத்த மக்கள்பெங்களூருவில் நாளை முதல் ஜூலை 22 வரை மீண்டும் லாக்டவுன் அமல்-சொந்த ஊர்களுக்கு படையெடுத்த மக்கள்

    ஒளிக்கு எதிராக போர்க்கொடி

    ஒளிக்கு எதிராக போர்க்கொடி

    சர்ச்சைக்குரிய பகுதிகளை தங்களது நாட்டின் வரைபடத்துடன் இணைத்தும் பஞ்சாயத்தை கூட்டினார் ஒளி. இதனால் நேபாளத்தில் ஒளிக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன. நேபாளத்தில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியிலேயே ஒளியை ராஜினாமா செய்ய கோரி நெருக்கடி கொடுக்கப்பட்டது.

    இந்தியா மீது குற்றச்சாட்டு

    இந்தியா மீது குற்றச்சாட்டு

    இதற்கும் கூட இந்தியாவைத்தான் ஒளி குற்றம்சாட்டியிருந்தார். ஆனாலும் நேபாள அரசியலில் செல்வாக்கை இழந்தார் ஒளி. இந்த செல்வாக்கை மீட்பதற்காக இந்தியாவுக்கு எதிரான வியூகங்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார் ஒளி.

    ராமர் நேபாளியாம்

    ராமர் நேபாளியாம்

    இந்த நிலையில் ஒளி கூறியதாக ஒரு கருத்தை நேபாள ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. அதில், கடவுள் ராமர் இந்தியரே அல்ல; அவர் ஒரு நேபாளி; ராமர் பிறந்த உண்மையான அயோத்தி நேபாளத்தில்தான் இருக்கிறது என ஒளி கூறியதாக அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.

    ஒரிஜனல் அயோத்தி நேபாளத்தில்..

    ஒரிஜனல் அயோத்தி நேபாளத்தில்..

    மேலும், நமது சீதையை இந்திய இளவரசர் ராமருக்கு மணம் முடித்து கொடுத்ததாக இன்னமும் நம்புகிறோம். நாம் சீதையை கொடுத்து அயோத்தி இளவரசருக்குத்தான் அது இந்தியாவில் இல்லை. நேபாளத்தின் பிர்குன்ஜ் என்ற இடத்துக்கு மேற்கே அயோத்தி என்ற சிறு கிராமம் உள்ளது என்றும் ஒளி கூறியுள்ளார்.

    பாஜக கடும் கண்டனம்

    பாஜக கடும் கண்டனம்

    நேபாள பிரதமர் ஒளியின் இந்த கருத்துக்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சமூக வலைதளங்களில் ஒளி மிகக் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார். பாஜகவின் தேசிய செய்தி தொடர்பாளர் விஜய் சோன்கர் சாஸ்திரி கூறுகையில், மக்களின் நம்பிக்கைகளுடன் இந்திய கம்யூனிஸ்டுகள் விளையாடுகிறார்கள். அதேபாணியை, மக்களால் நிராகரிக்கப்பட்ட நேபாள கம்யூனிஸ்டுகளும் பின்பற்றுகின்றனர் என்றார். மேலும் ராமர் என்பது எங்களது நம்பிக்கை. அது நேபாள பிரதமராக இருந்தாலும் யாராக இருந்தாலும் சரி.. இந்த நம்பிக்கையில் விளையாடிக் கொண்டிருப்பதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்றார்.

    விடுதலை சிறுத்தைகள் ரவிக்குமார்

    விடுதலை சிறுத்தைகள் ரவிக்குமார்

    இதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நேபாள பிரதமரின் கருத்து குறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள விசிக லோக்சபா எம்பி ரவிக்குமார், சீனா ராணுவ ரீதியாக நெருக்கடி கொடுத்தால் நேபாளம் பண்பாட்டு ரீதியாக நெருக்கடி கொடுக்கிறது என கூறியுள்ளார்.

    English summary
    Nepal PM KP Sharma Oli claimed that Lord Rama belongs to Nepal, not India.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X