For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிட்காயினின் உண்மையான மதிப்பு பூஜ்யம்தான்.. பகீர் கிளப்பும் அமெரிக்க ஆய்வாளர்

பிட்காயினின் உண்மையான மதிப்பு பூஜ்யம்தான் என்று அமெரிக்க ஆய்வாளர் ஒருவர் அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

நியூயார்க்: பிட்காயினின் உண்மையான மதிப்பு பூஜ்யம்தான் என்று அமெரிக்க ஆய்வாளர் ஒருவர் அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். பங்கு சந்தையில் இதன் மதிப்பு எவ்வளவு உயர்ந்தாலும் உண்மையான மதிப்பு பூஜ்யம்தான் என்று அந்த ஆய்வாளர் கூறியுள்ளார்.

சமீப காலமாக பிட்காயினின் மதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இவரது இந்த அறிவிப்பு பொருளாதார வல்லுனர்களுடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் பிட்காயின் மீதான நம்பகத்தன்மையும் மிகவும் குறைவு என்றும் அவர் கூறியுள்ளார்.

அவர் தனது அறிக்கையில் பிட்காயினுக்கு ஏன் உலகில் உண்மையான மதிப்பு இல்லை என்றும் அதிர்ச்சி அளிக்க கூடிய காரணங்களை சொல்லி இருக்கிறார்.

பிட்காயின்

பிட்காயின்

உலகில் நாம் பயன்படுத்தும் பணம் போலவே இணையத்திலும் நிறைய பணம் இருக்கிறது. இந்த பணத்தை நாம் நேரடியாக பயன்படுத்தாமல் இணையத்தில் மட்டுமே பயன்படுத்துவோம். 1500க்கும் அதிகமான இதுபோன்ற பணங்கள் உலகில் பயன்பாட்டில் இருக்கிறது. இதற்கு 'கிரிப்டோ கரன்சி' என்று பெயர். அவற்றில் ஒன்றுதான் இந்த பிட்காயின்.

பயன் என்ன

பயன் என்ன

இந்த பிட்காயினை நாம் பணம் கொடுத்தோ, பங்குகள் கொடுத்தோ வாங்கி கொள்ள முடியும். மேலும் தங்கத்திற்கு பதிலாகவும் இதை மாற்ற முடியும். இதற்கு வடிவம் இல்லை என்பதால் இதை வைத்து இணையத்தில் எளிதாக பொருட்கள் வாங்கலாம். மேலும் இதற்கு சரியான வரி விதிப்பு முறையோ, வங்கி கட்டுப்பாடோ இல்லை என்பதால் இதில் அதீத சுதந்திரம் இருக்கிறது.

மதிப்பு என்ன

மதிப்பு என்ன

தற்போதைய சந்தை நிலவரப்படி இதனுடைய மதிப்பு 10 லட்சம் ரூபாய் ஆகும். அதாவது 16 ஆயிரம் டாலர். இந்த வருட தொடக்கத்தில் இதன் மதிப்பு வெறும் 1000 டாலர் மட்டுமே இருந்தது. ஆனால் ஒரே வருடத்தில் விஸ்வரூப வளர்ச்சி அடைந்து இருக்கிறது. இந்த ஒரு மாதத்தில் மட்டும் 10,000 டாலர் வரை இது உயர்ந்தது. இடையில் சில நாள் வீழ்ச்சியும் அடைந்தது.

மதிப்பே இல்லை

மதிப்பே இல்லை

இந்த பணத்திற்கு மதிப்பே இல்லை என்று 'மோர்கன் ஸ்டான்லி' என்ற அமெரிக்க ஆய்வாளர் தெரிவித்து இருக்கிறார். இதன் உண்மையான மதிப்பு பூஜ்யம்தான் என்றும் அவர் கூறியுள்ளார். நாம் பார்க்கும் மதிப்பு வெறும் மாயை என்றும் எப்போது வேண்டுமானாலும் இது திவாலாகி மறைந்து போகும் என்று அவர் எச்சரிக்கை விடுத்து இருக்கிறார். இது உருவாக்கப்பட்டதன் நோக்கமும் அதுதான் என்றும் கூறப்பட்டு இருக்கிறது. இதை உருவாக்கியவர்கள் யார் என்று இன்னும் கண்டிபிடிக்கப்படவில்லை.

English summary
An analyst named Morgan Stanley says the real value of Bitcoin will be zero as per report. In recent days the value Bitcoin has increased to 16 thousand dollar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X