For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியாவுக்கு எச்சரிக்கையா போங்க, ரஷ்யான்னா யோசிங்க.. குடிமக்களுக்கு அமெரிக்கா அட்வைஸ்

வெளிநாடுகளுக்கு செல்வது குறித்து அமெரிக்க மக்களுக்கு அந்நாட்டின் அரசு புதிய அறிவுரைகள் வழங்கியுள்ளது.

By Dakshinamurthy
Google Oneindia Tamil News

Recommended Video

    இந்தியாவிற்கு எச்சரிக்கையா..வடகொரியாவுக்கு போகவே வேண்டாம்... மக்களுக்கு அமெரிக்க அறிவுரை

    அமெரிக்கா: வெளிநாடு செல்லும் அமெரிக்கர்களுக்கு நான்கு விதமான புதிய கட்டுப்பாடு அறிவுரைகளை அமெரிக்க அரசு வழங்கியுள்ளது.

    தீவிரவாதம் என்ற ஒற்றை வார்த்தையை வைத்துக்கொண்டு உலக நாடுகளை மட்டுமல்ல, தன் சொந்த பிரஜைகளையே அமெரிக்க அரசு பயமுறுத்தி வருகிறது. குறிப்பாக இரட்டை கோபுரங்கள் இடிப்பு சம்பவத்திற்கு பின் தீவிரவாதம் என்ற வார்த்தை அமெரிக்கர்களின் வாழ்க்கையில் ஆழமாக கலந்து விட்டது.

    இந்நிலையில் பிற நாடுகளுக்கு சுற்றுலா செல்லும் அமெரிக்க மக்களுக்கு அந்நாட்டு அரசு ஒரு புதிய அறிவுரையை வெளியிட்டுள்ளது. அதில் பாதுகாப்பு நிலைகளின் அடிப்படையில் பயணம் செய்யும் நாடுகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

     சந்தோஷமா போயிட்டுவாங்க…

    சந்தோஷமா போயிட்டுவாங்க…

    முதல் நிலையில் உள்ள நாடுகளுக்கு சாதாரண முன்னெச்சரிகை நடவடிக்கைகளுடன் செல்லலாம். அதாவது அமெரிக்காவுடன் நேசக்கரம் கோர்த்துள்ள நாடுகளுக்கு முதல்நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனடா, ஸ்வீடன், குவைத், ஹாங்காங் உள்ளிட்ட நாடுகள் இந்த பட்டியலில் உள்ளன

     ஜாக்கிரதையா போயிட்டுவாங்க...

    ஜாக்கிரதையா போயிட்டுவாங்க...

    2வது நிலையில் உள்ள நாடுகளுக்கு செல்லும் போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா, இந்தோனேசியா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் இரண்டாம் நிலையில் உள்ளன.

     போயே ஆகணுமா… அப்ப போங்க

    போயே ஆகணுமா… அப்ப போங்க

    3வது நிலையில் உள்ள நாடுகளுக்கு செல்வதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. இந்த பட்டியலில் ரஷ்யா, பாகிஸ்தான், சூடான் உள்ளிட்ட நாடுகள் உள்ளன. இங்கு பயணம் மேற்கொள்ளும் அமெரிக்கர்கள் குறிவைத்து தாக்கப்படுவதால், இந்த நாடுகளுக்கு செல்லும் முன் யோசித்து செல்லுங்கள் என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

     யப்பா சாமி….போகவே போகாதீங்க…

    யப்பா சாமி….போகவே போகாதீங்க…

    கடைசியாக நான்காவது நிலையில் உள்ள நாடுகளுக்கு செல்லவே வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வடகொரியா, ஆப்கானிஸ்தான், ஈரான், சிரியா, லிபியா ஆகிய நாடுகளுக்கு செல்லவே வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நாடுகளுக்கு சென்றால் உயிருக்கு உத்தரவாதம் கிடையாது என்றும் பகிரங்கமாகவே அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

    English summary
    The United States has advised its citizen to avoid travelling to Russia, citing risks including civil unrest, terrorism and targeted harassment against Americans.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X