For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பேசாம இஸ்ரேலை அமெரிக்காவுக்கு "ஷிப்ட்" பண்ணிருங்க.. பேஸ்புக்கில் வலம் வரும் ஒரு ஐடியா!

Google Oneindia Tamil News

கெய்ரோ: பேஸ்புக்கில் இஸ்ரேல்- பாலஸ்தீனப் போர் தொடர்பாக ஒரு வரைபடத்துடன் கூடிய பதிவு படு சூடாக வலம் வருகிறது.

இஸ்ரேலால் பாலஸ்தீன மக்கள் படும் அவதியிலிருந்து அவர்களைக் காக்க இது ஒன்றுதான் வழி என்று அந்தப் பதிவும் படமும் கூறுகின்றன. அதை விட பாலஸ்தீனம் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த அரபு நாடுகளும் நிம்மதியாக இருக்கும் என்றும் இந்த யோசனை கூறுகிறது.

கேலியாக இல்லாமல் சற்று சீரியஸாகவே இந்தப் படத்தையும், அதன் ஐடியாவையும் இதைப் பதிந்தவர் உருவாக்கியுள்ளார்.

பாலஸ்தீனம் - இஸ்ரேல்

பாலஸ்தீனம் - இஸ்ரேல்

முதல் உலகப் போர் காலத்திலிருந்தே இருந்து வருவது இந்த இஸ்ரேல் - பாலஸ்தீன மோதல். ஆரம்பத்தில் அரபு - யூத மோதலாக உருவெடுத்து, கடைசியில் இஸ்ரேல் என்ற நாட்டை 1948ம் ஆண்டு இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் உருவாக்கியதைத் தொடர்ந்து, நிலத்தைப் பறி கொடுத்த பாலஸ்தீனியர்கள், இஸ்ரேலுக்கு எதிராக கிளம்பியதைத் தொடர்ந்து இன்று வரை இஸ்ரேலிடம் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டுள்ளனர்.

கோவணத் துணி போல சில நிலப் பகுதிகள்

கோவணத் துணி போல சில நிலப் பகுதிகள்

கடும் போராட்டத்திற்குப் பின்னர் மேற்குக் கரை மற்றும் காஸா முனை ஆகிய பகுதிகளை பாலஸ்தீனமாக அங்கீரிக்க முன்வந்தது இஸ்ரேல். அமெரிக்காவும் அதை ஏற்குமாறு யாசர் அராபத்தை நெருக்க, கடைசியில் அதுவே இறுதியான பாலஸ்தீனமாக வரையறுக்கப்பட்டது.

இன்றும் நீடிக்கும் மோதல்

இன்றும் நீடிக்கும் மோதல்

ஆனால் அராபத் மறைவுக்குப் பின்னர் மீண்டும் பிரச்சினைகள் தலை தூக்கின. தொடர்ந்து இன்று வரை மோதல் நீடித்து வருகிறது. அப்பாவி பாலஸ்தீனியர்கள் செத்து மடிகிறார்கள்.

இதற்கு இதுதான் தீர்வா...

இதற்கு இதுதான் தீர்வா...

இந்த நிலையில் தற்போது நடந்து வரும் இஸ்ரேல் தாக்குதல் பின்னணியில் பேஸ்புக்கில் ஒரு பதிவுசூடாக வலம் வரத் தொடங்கியுள்ளது. அது பாலஸ்தீன மக்கள் நிம்மதியாக வாழ இஸ்ரேலை அமெரிக்காவுக்கு இடம் மாற்றி விடலாம் என்பதுதான்.

51வது மாநிலமாக இஸ்ரேலை அறிவிக்கலாம்

51வது மாநிலமாக இஸ்ரேலை அறிவிக்கலாம்

அதுதொடர்பாக இஸ்ரேலை உள்ளடக்கிய ஒரு வரைபடத்துடன், சில யோசனைகளையும் அதில் சொல்லியுள்ளனர். அதன்படி இஸ்ரேலை அமெரிக்காவின் 51வது மாகாணமாக அறிவிக்கலாம் என்று இந்த யோசனை சொல்கிறது. ஏன் இப்படி மாற்ற வேண்டும் என்பதற்கான காரணங்களையும் அதில் அடுக்கியுள்ளனர்.

இஸ்ரேலியர்களை விரும்புவது அமெரிக்கர்கள் மட்டுமே

இஸ்ரேலியர்களை விரும்புவது அமெரிக்கர்கள் மட்டுமே

இஸ்ரேலியர்களை உலகில் யாருமே விரும்பவில்லை. அமெரிக்கர்கள் மட்டுமே விரும்புகிறார்கள். எனவே இஸ்ரேலை அமெரிக்காவுக்கு மாற்றுவதே சிறந்தது.

திறந்த மனதுடன் வரவேற்பார்கள்

திறந்த மனதுடன் வரவேற்பார்கள்

அமெரிக்காவுக்கு இஸ்ரேலை மாற்றுவதை அமெரிக்கர்கள் திறந்த மனதுடன் வரவேற்பார்கள்.

நிறைய இடம் உள்ளது

நிறைய இடம் உள்ளது

அமெரிக்காவில் நி்லப்பரப்பு பெரியது. நிறைய இடம் உள்ளது. எனவே இஸ்ரேலை அமெரிக்காவுக்கு மாற்றுவதில் இடப் பிரச்சினை வராது.

பாதுகாப்பான யூதப் பிரதேசமாக திகழும்

பாதுகாப்பான யூதப் பிரதேசமாக திகழும்

அமெரிகாவுக்குள் இஸ்ரேலை மாற்றி விட்டால், பாதுகாப்பான, சுதந்திரமான யூதப் பிரதேசமாக அது திகழும்.

அமெரிக்காவுக்கு செலவு மிச்சம்

அமெரிக்காவுக்கு செலவு மிச்சம்

தற்போது இஸ்ரேல் பாதுகாப்புக்காக அமெரிக்கா ஆண்டு தோறும் 30 பில்லியன் டாலர் பணத்தை செலவிட்டு வருகிறது. அந்தப் பணம் அப்படியே மிச்சமாகும்.

பாலஸ்தீனியர்களுக்கு நாடு கிடைக்கும்

பாலஸ்தீனியர்களுக்கு நாடு கிடைக்கும்

இஸ்ரேலை மாற்றுவதன் மூலம் பாலஸ்தீனியர்களுக்கும் அவர்களது நாடு அப்படியே திரும்பக் கிடைக்கும்.

மத்திய கிழக்கில் அமைதி தவழும்

மத்திய கிழக்கில் அமைதி தவழும்

இஸ்ரேல் போய் விட்டால் மத்திய கிழக்கு முழுவதும் அமைதி திரும்பும், மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விடுவார்கள்.

எண்ணெய் விலை குறையும் - உலகம் மகிழும்

எண்ணெய் விலை குறையும் - உலகம் மகிழும்

மேலும் எண்ணெய் விலையும் உலக அளவில் குறையும். உலக நாடுகளில் பணவீக்கம் குறையும். உலகமே மகிழ்ச்சி அடையும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் அமெரிக்கா இருக்காதே...

ஆனால் அமெரிக்கா இருக்காதே...

இந்தப் பதிவுக்கு ஒருவர் ஒரு கமெண்ட் போட்டுள்ளார். அதுதான் பலமாக யோசிக்க வைக்கிறது. அதாவது "தயவு செய்து இஸ்ரேலை அமெரிக்காவுக்கு மாற்றாதீர்கள். அப்படி மாற்றினால் படிப்படியாக அருகில் உள்ள மாகாணங்களை இஸ்ரேல் வளைத்து விடும். கடைசியில் அமெரிக்கா முழுவதையும் தன்னுடன் சேர்த்து இஸ்ரேலாக அறிவித்து விடும். பிறகு அமெரிக்க, இஸ்ரேல் யுத்தம் வெடிக்கும். பாவம், அமெரிக்க பெண்களும், குழந்தைகளும்.... காரணம், இஸ்ரேலியர்களுக்கு பெண்களையும், குழந்தைகளையும் கொல்வது மிகவும் பிடித்தமானது என்று அதில் எச்சரித்துள்ளார் அந்தக் கருத்தைச் சொன்னவர்.

English summary
There is a drawing, its on the rounds in FB suggests for the relocation of Israel into USA.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X