For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிறந்த நாளும் அதுவுமாக மோடி பற்றி இப்படியா ட்வீட் செய்வது.. வாங்கிகட்டும், பாகிஸ்தான் அமைச்சர்

Google Oneindia Tamil News

Recommended Video

    Prime Minister Narendra Modi's 69th Birthday today

    இஸ்லாமாபாத்: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு உலகம் முழுவதிலுமிருந்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் வந்து குவிகின்றன. ஆனால் பாகிஸ்தான் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஃபவாத் உசேன் சவுத்ரி, சர்ச்சைக்குரிய வகையில், ட்வீட் செய்து வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளார்.

    இந்திய நெட்டிசன்களிடமிருந்து மட்டுமின்றி, பாகிஸ்தானியர்களிடமிருந்தும் அவர் விமர்சனங்களை எதிர்கொண்டு திணறி வருகிறார்.

    சர்ச்சைக்குரிய ட்வீட்களை ஃபவாத் செய்வது இது முதல் முறை அல்ல. இதுதான் அவரது தொழிலாகவே மாறிப்போய்விட்டது.

    ஒன்று நீ இருக்கணும்.. இல்லாட்டி நான் இருக்கணும்.. அமித்ஷா பேச்சு கிலி கிளப்புதே.. இதுதான் திட்டமா?!ஒன்று நீ இருக்கணும்.. இல்லாட்டி நான் இருக்கணும்.. அமித்ஷா பேச்சு கிலி கிளப்புதே.. இதுதான் திட்டமா?!

    சர்ச்சை ட்வீட்

    இன்று ஃபவாத் வெளியிட்ட சர்ச்சைக்குரிய அந்த ட்வீட்டில் சொல்லியிருப்பது இதுதான்: கருத்தடை முக்கியத்துவத்தை இந்த நாள் நமக்கு நினைவூட்டுகிறது (Today reminds us the importance of contraceptives) என்று அவர் ட்வீட் செய்துள்ளார். இந்த ட்வீட்டில், ஃபவாத் #modibirthday என்ற ஹேஷ்டேக்கையும் பயன்படுத்தியுள்ளார். அதாவது மோடி பிறந்திருக்க கூடாது என்பது இவரின் குதர்க்க ட்வீட் நோக்கம்.

    போட்டி இங்கே இல்லை

    போட்டி இங்கே இல்லை

    இதனால் கோபமடைந்துள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் நெட்டிசன்கள் ஃபவாத்தை நார்நாராக கிழித்து வருகிறார்கள். ஆயிஷா அகமது என்பவர் கூறுகையில், பாகிஸ்தான் அரசின் பிரதிநிதி, சுதந்திர நாட்டின் பிரதமர் பற்றி என்ன மாதிரி கருத்து தெரிவிக்கிறார்?. இத்தகைய போட்டியை, நீங்கள் காட்ட விரும்பினால், தொழில்நுட்பம், ஜனநாயகம் ஆகியவற்றில் போட்டியிடுங்கள். மோசமான எழுத்துக்களில் போட்டியிட்டு வெற்றியாளராக இருப்பது பெருமை அல்ல. என்று கூறியுள்ளார்.

    உங்களையும், ட்வீட்டையும் பார்த்தால்

    ஒருநாள்தானா? வருடத்தில் ஒரு நாள் மட்டுமா? உங்கள் ட்வீட் மற்றும் உங்கள் முகம், கருத்தடை மருந்துகளின் முக்கியத்துவத்தை 24x7, ஒரு வருடத்தில் 365 நாட்கள் எங்களுக்கு நினைவூட்டுகிறது என்று சொல்லி, கேலி செய்கிறார் இந்த நெட்டிசன்.

    விரக்தியில் அமைச்சர்

    விரக்தியில் அமைச்சர்

    இதற்கு முன்னர், இந்தியாவின் சந்திரயான் -2 லேண்டர் விக்ரம் சந்திரனின் மேற்பரப்பில் இருந்து 2 கி.மீ தூரத்தில் தொடர்பு துண்டிக்கப்பட்டபோதும், இந்தியாவை சீண்டி ட்வீட் வெளியிட்டார் ஃபவாத். ஜம்மு-காஷ்மீருக்கு 370 வது பிரிவின்கீழ் வழங்கப்பட்ட சிறப்பு அதிகாரத்தை இந்தியா வாபஸ் பெற்றதும், விரக்தியின் உச்சத்திற்கு போய்விட்டார், பாகிஸ்தான் அமைச்சர் ஃபவாத். அப்போது முதலே இந்தியாவையும், மோடியையும் வசைமாரி பொழிந்து ட்வீட் செய்வது இவர் வாடிக்கையாகிவிட்டது.

    English summary
    Today reminds us the importance of contraceptives, says Pakistan minister Fawad Hussain Chaudhry.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X