For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரோமிலும் ஒரு “சுமைதாங்கி” கல்.. 10,000 வருடப் பழமையாம்!

Google Oneindia Tamil News

ரோம்: உலகின் மிகப்பழமையான சுமைதாங்கி கல் அகழ்வாராய்ச்சியாளர்களால் மத்திய தரைக்கடல் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இந்தியாவில்தான் சுமை தாங்கிக் கல் உள்ளது என்றால் ரோமிலும் அது கிடைத்துள்ளது ஆச்சரியமூட்டுவதாக உள்ளது.

Remnants of underwater Stone Henge monument in Rome

12 மீட்டர் உயரமாம்:

இத்தாலியின் டெல் அவிவ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் மற்றும் இத்தாலி கடலாராய்ச்சி மையத்தின் ஆய்வாளரும் இணைந்து நிகழ்த்திய இந்த அகழ்வாராய்ச்சியில் 12 மீட்டர் உயரம் கொண்ட சுமைதாங்கி கல்லின் பாகங்கள் சிசிலி கடலுக்கடியில் 40 மீட்டர் ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தரையில் ஒட்டிய அமைப்பு:

இது தரையில் அமைக்கப்பட்டு இருந்திருக்க வேண்டும் எனவும், மனிதன் வாழ்ந்து வந்த இப்பகுதி தண்ணீரால் பின்னர் சூழப்பட்டிருக்க வேண்டும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

கடவுள் நம்பிக்கை கற்கள்:

வேட்டையாடி வாழ்ந்து வந்த கற்கால மனிதனின் கடவுள் நம்பிக்கைகளை உணர்த்துவதாக சுமைக்கற்கள் அடையாளம் காணப்படுகின்றன.

பழமையானது இதுதான்:

இதுவரை கண்டெடுக்கப்பட்டதிலேயே மிகப்பழமையான இந்த சுமைதாங்கி மனிதனின் அறிவாற்றலையும், சமூகமாக அவன் வாழ்ந்து வந்ததையும் உணர்த்துகிறது.

தரைக்கடலில் மனிதர்கள் வாழ்க்கை:

இந்த கண்டுபிடிப்பு மனிதன் மத்திய தரைக்கடல் பகுதியில் வாழத் தொடங்கிய காலகட்டத்தை அடையாளம் காண உதவும் என்று ஆராய்ச்சியாளர்களால் நம்பப்படுகிறது.

English summary
Archaeologists have discovered the remnants of a mysterious underwater Stone Henge-style monument built by an unknown ancient civilisation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X