For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஈரான் அமைச்சர் ஹசன் ரவுகானி பாதுகாவலரால் சுட்டுக் கொலை

Google Oneindia Tamil News

டெஹ்ரான்: ஈரான் தொழில்துறை இணையமைச்சரை அவரது பாதுகாவலரே சுட்டுக் கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈரான் அதிபர் ஹசன் ரவுகானியின் அமைச்சரவையில் தொழில்துறை இணையமைச்சராக இருப்பவர் சஃப்தார் ரஹ்மதபாடி. இவர் நேற்று தலைநகர் டெஹ்ரானின் கிழக்கு பகுதியில் காரில் சென்றுக் கொண்டிருந்துள்ளார். அப்போது சற்றும் எதிர்பாராத சமயத்தில் அமைச்சரை அவரது பாதுகாவலர்களில் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

அதில், தலை மற்றும் மார்பில் குண்டுகள் பாய்ந்த நிலையில் காருக்கள் சுருண்டு விழுந்த அமைச்சர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாகப் பலியானார்.

அமைச்சர் படுகொலை செய்யப் பட்ட சம்பவத்தில் பாதுகாவலரே குற்றவாளி என்பதை ஈரான் அரசு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வில்லை. எனினும் போலீசார் தொடந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த புதனன்று அரசு வழக்கறிஞர் ஒருவர் அவரது பாதுகாவலரால் சுட்டுக் கொல்லப் பட்டார். இந்நிலையில் அமைச்சர் ஒருவரையும் அவரது பாதுகாவலரே சுட்டுக் கொன்ற சம்பவம் அங்குள்ள பிரபலங்களிடையே உயிர்பயத்தை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Iran's official news agency is reporting that a gunman has shot and killed a deputy industry minister.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X